எதிர் வரும் சனிக்கிழமை (28-07-18) அன்று தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) நடாத்தும் கறுப்பு யூலை நிகழ்விற்கும் எமதமைப்புக்கும் (TCC) எந்த வித தொடர்பும் இல்லை

0

வணக்கம்
எதிர் வரும் சனிக்கிழமை (28-07-18) அன்று தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) நடாத்தும் கறுப்பு யூலை நிகழ்விற்கும் எமதமைப்புக்கும் (TCC) எந்த வித தொடர்பும் இல்லை என்பதையும் இந்த நிகழ்வில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவாகிய நாம் பங்கெடுக்கவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம். நாம் கடந்த 23ம் திகதி பிரதமர் வாசத்தலத்திற்கு முன்பாக கறுப்பு யூலை கவன ஈர்ப்பு நிகழ்வு நடாத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. எமது அமைப்பின் அனுமதியின்றி இத் துண்டுப் பிரசுரத்தில் எமது அமைப்பின் பெயர் பயன்படுத்தப் பட்டமைக்கு எமது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் எதிர் காலத்திலும் எமது அமைப்பின் அனுமதியின்றி எமது இலச்சினையைப் பயன்படுத்துவதோ, கடிதத்தாள்களைப் பயன்படுத்துவதையோ வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
தமிழீத் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் கொள்கை பிறழாது பயணிப்போருடன் இணைந்து செயற்படுவதில் எமது அமைப்பிற்கு எதுவித ஆட்சேபனையும் இல்லை என்பதையும் அறியத் தருகிறோம.;

 

‘தமிழரின் தாகம் தமிழீத் தாயம்.’

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா

TCC arikkai270718

SHARE