எழுச்சி பூர்வமாக காவிய நாயகர்களுக்கான வீர வணக்கம் ஸ்கோட்லேண்ட் மண்ணிலும் மக்களால் கார்த்திகை பூக்களை மாவீரர்களின் பாதங்களில் தூவி வண்க்கம் செலுத்தினார்கள்.
தாயாக விடுதலைக்காக புலம் பெயர்ந்த தேசங்களில் பல தளங்களிலும் பணியாற்றி வருகின்ற எம் தமிழ் உறவுகளே, நீண்டு செல்லும் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் வீச்சுக்கு தாயகத்திலும் புலத்திலும் கலை பண்பாட்டுக் கழகத்தினதும் இத்துறையோடு உணர்வுடனும் அற்பணிப்புடனும் இணைந்து பணியாற்றி வருகின்ற கலைஞர்களின் பங்களிப்பானது எமது விடுதலையை வீச்சாக்கி நிற்கிறது. கடந்த காலங்கள் போல் இனிவரும் காலங்களிலும் அனைவரையும் உள்வாங்கி பிரித்தானியாவில் நடைபெறும் தேச விடுதலை சார்ந்த எழுச்சி நிகழ்வுகளிலும்...