தமிழர்கள் பதில்களுக்கு தகுதியானவர்களே – ஜெரமிக் கோர்பன்

0

தமிழர்கள் மோசமான இன்னல்களை கடந்து வந்துள்ளார்கள். பதில்களுக்கு அவர்கள் தகுதியானவர்களே. எனவே மீண்டுமொரு துன்ப சம்பவம் அவர்களுக்கு நடைபெறாது நாம் தடுக்க வேண்டும் என பிரித்தானியாவின் எதிர்க்கட்சி தலைவர் ஜெரமிக் கோர்பன் தெரிவித்தார்.

தமிழினப்படுகொலை நடைபெற்றதை உறுதிசெய்யவேண்டும் மற்றும் பொறுப்பு கூறலை வலியுறுத்தி பிரித்தானிய பாரளுமன்றில் இன்று நடைபெற்ற பிரித்தானிய அனைத்து தமிழர் கட்சி குழு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிரித்தானிய பாராளுமன்றின் இலக்கம் 14 அறையில் நடைபெற்ற மேற்படி மாநாடு காலை 10 மணியளவில் மௌனஅஞ்சலியுடன் ஆரம்பமானது.

இம்மாநாட்டில் பிரித்தானிய எதிர்க்கட்சி தலைவர் ஜெரமிக் கோர்பன் அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவின் தலைவர் போஸ்காலி பாராளுமன்ற உறுப்பினர்களான எட் டேவி பெரி கார்டினர் மற்றும் கனடிய பாராளுமன்றின் உறுப்பினர் ஆனந்த சங்கரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

SHARE