தமிழர் தேசம் மீட்க அக்னிக்கு தம்மை ஆகுதியாக்கிய முத்துகுமார்,முருகாதாஸ் உட்பட 25 ஈகையர்களின் வணக்க நிகழ்வு..

0

 

விதியே விதியே என் செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை….
அன்பார்ந்த உழைக்கும் தமிழ் மக்களே ..
என தொடங்கி மரண சாசனம் எழுதிய முத்துக்குமாரினதும் , உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் ஆத்மார்த்த வேண்டுகோள் என்ற தலைப்பில் மரண சாசனம் எழுதிய முருகதாசன்; அவர்களுடன் வீரத்தமிழ் மங்கை தோழர் செங்கொடி, அப்துல் ர{ஹப் உட்பட 25 ஈகையர்களின் தியாகம் போற்றும் வணக்க நிகழ்வு வடமேற்கு லண்டனில் ஹரோ பகுதியில்; பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் மிகவும் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. இதன் ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரை திருமதி கல்யாணி தவராசா அவர்கள் ஏற்றி வைக்க அதனை தொடர்ந்து திரு நவரட்னசிங்கம் அவர்களால் தமிழீழ தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து சுதர்கினி தண்கேஸ்வரன் அவர்களால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு ஈகை பேரொளி முருகதாசன் அவர்களின் தாயார் தம் புத்திரனுக்கும் ஏனைய கொடையாளர்களுக்கும் கனத்த மனதுடன் மலர் மாலை சாற்றினார்.. தொடர்ந்து எழுச்சி கானம் பாடப்பட, தாயை தொடர்ந்து வரிசைக்கிரமமாக வந்த மக்கள் தீபம் ஏற்றி மலர்கள் கொண்டு ஈகையர் தம் தியாகத்தை போற்றி வணங்கினர். தொடர்ந்து இளம் சிறார்களினால் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி இடம் பெற்று திரு செல்லத்தம்பி மகேந்திரன் அவர்களால் நினைவுரை ஆற்றப்பட்டது. இளம் சிறார்களினால் நாட்டிய நடன நிகழ்ச்சிகளும், எழுச்சி நடனங்களும் இடம்பெற்றன. இறுதியாக தேசியக்கொடி கையேந்தப்பட்டு தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்ற உறுதி மொழி எடுக்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

SHARE