இலங்கை தூதகரத்துக்கு முன்பாக பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

0

இலங்கை சுதந்திர மடைந்து எழுபத்தொரு ஆண்டுகளை கடக்கும் நிலையிலும் தொடரும் தமிர்கள் மீதான இன அழிப்பைக் கண்டித்து இன்று ஈழத்து தமிழர்களாலும், உலகெங்கும் வாழும் தமிழ் மக்களாலும் இந்த நாள் கருப்பு நாளாக பிரகடனப்படுத்தப்பட்டு, எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.அந்த வகையில் இங்கிலாந்தில் அமைந்துள்ள இலங்கை தூதகரத்துக்கு முன்பாக பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று மிகவும் புரட்சிகரமாக முன்னெடுக்கப்பட்டது.காலை 10 மணிக்கு இளையோர்,பெண்கள் ஆண்கள் என அனைவரும் ஒன்று கூட அக வணக்கத்துடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கப்பட்டது. தமிழீழ தேசிய கொடிகளை தாங்கி இளையோர்களால் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. silankan independence day black day for tamils *we are eelam tamils,we rejected srilankan identity *Our nation tamil eelam *Our leader prabakaran *Britain britain save the tamils என்ற சத்தங்கள் தூதரக அதிகாரிகளை அதிர வைக்க அதனை தொடர்ந்து விடுதலைக்கான குரலாக பறை இசைகள் முழங்கப்பட மிகவும் ஆக்ரோஷமாக இளையோர்களால் எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்பட்டன. மதியம் வரை தொடர்ந்த இப்போராட்டம் இறுதியாக தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்ற வேட்கையுடன் நிறைவு பெற்றனது.

SHARE