அடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு இணைய வழியினூடாக இன்று நடைபெற்றது.

0

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழ தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாகவும் இருந்து,தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவு சுமந்தஇந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர் திரு சின்னராசா அவர்கள் ஏற்றி வைக்க நிகழ்வுகள் ஆரம்பமானது . தொடர்ந்து பிரித்தானிய தேசியக் கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர், திரு செல்வன் அவர்களும், தமிழீழ தேசியக் கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வட மேற்கு பிராந்திய உதவிப் பொறுப்பாளர் திரு குகன் அவர்களும் ஏற்றி வைத்தார்கள் . இந்நாளின் நினைவுச் சுடரினை முன்னாள் மன்னார் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர்,திரு சுரேஷ் அவர்களும் ஏற்றி வைத்தார்கள் .
அகவணக்கத்தினை தொடர்ந்து மலர்மாலையினை திருமதி நளினி சிவகுமார் அணிவித்ததைத் தொடர்ந்து மலர்வணக்கம், சுடர்வணக்கம் இடம்பெற்றது.

நிகழ்வில் எழுச்சிக் கவிதைகளை, திருமதி துஷ்யந்தினி திலீபன் மற்றும்,திருமதி அன்னலக்சுமி ஜெயபாபு வழங்கினார்கள்.தமிழ் இளையோர் அமைப்பில் இருந்து செல்வி கீர்த்தனா உதயகுமார் அவர்களுடைய ஆங்கில உரை இடம்பெற்றது.எழுச்சி நடனங்களை திருமதி ராகினி ராஜகோபால்,
திருமதி தயாபதி அருளானந்தம்,மற்றும் திருமதி சர்மினி கண்ணன் ஆகிய ஆசிரியர்களின் மாணவிகள் வழங்கினார்கள் . குட்டிக் கண்ணன் இசைக்குழுவின் கலைஞர்கள் வழங்கிய இசை நிகழ்ச்சியில் பாடல்களை சுபேரகன் அனுரா மற்றும் திருமதி தேவிகா அனுரா பாடியிருந்தார்கள். இவ் இசை நிகழ்ச்சிக்கு பின்னணி இசை வழங்கியிருந்தவர்கள் திரு அனுரா மற்றும் துவாரகன் அனுரா .

இன்றைய நாளின் கருத்துரையினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பாட்டாளர் திரு நியூட்டன் அவர்கள் வழங்கினார்கள் . நம்பிக்கையின் உரமாக ஒலிக்கும் நம்புங்கள் தமிழீழம் என்ற பாடலோடு தேசிய கொடிகள் கையேந்தப் பட்டு,உறுதி மொழியோடு நிகழ்வுகள் நிறைவு பெற்றது.

SHARE