அமரர் சிவயோகம்மா ஜெயசிங் அவர்கள் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.

0

சிவயோகம்மா ஜெயசிங் கடந்த 01/06/22 அன்று உடல்நலக்குறைவால் சாவடைந்தார். இவர் தாயகத்தில் உடுப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவர். பிரித்தானியாவில் வசித்த இவர், ஆரம்ப காலம் முதல் விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் பல பணிகளை மேற்கொண்டிருந்தார். குறிப்பாக பிரித்தானியக் கிளை, தமிழர் புனர்வாழ்வுக்கழகம், வெண்புறா போன்ற கட்டமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியவராவர். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போதும் எம் தேசவிடுதலைக்காய் அளப்பரிய பணியாற்றிய சிவயோகம்மா ஜெயசிங் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் என்ற மதிப்பு அளிக்கப்பட்டது.

SHARE