அன்னை பூபதி அவர்களின் 34 ம் ஆண்டு நினைவு வணக்க நாளும் நாட்டுப்பற்றாளர் நினைவு கூரலும்

0

தமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக 19.03.1988 இருந்து 19.03.1988 வரையிலான சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் (அகிம்சை வழியில்) தொடர்ந்து உயிர் நீத்த நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 34 ம் ஆண்டு நினைவு வணக்க நாளும் நாட்டுப்பற்றாளர் நினைவு கூரலுமானது லண்டனில் இன்றய நாளில் வணக்க நிகழ்வுகளானது தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரினால் முன்னெடுக்கப்பட்டது.

தமிழீழத்திற்கு அமைதிப் படையின் போர்வையில் வந்த இந்தியப் படைகள் நாளும் தன் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து,எத்தனையோ கொடுமைகளை விளைவித்தது.
எம் தேசத்தின் உரிமைக்காக குரல் கொடுப்போரை பாரதம் அன்றும் இன்றும் ஏளனமாகவே பார்த்தது அது எத்தனையோ உயிர்களையும் பறித்தது.

உலகிற்கு அகிம்சையை போதித்த நாடு என்று கூறிக்கொண்டு அடாவடித்தனமான செயல்களில் ஈடுபட்ட இந்திய அரசுக்கு எதிராகவும் அதன் அமைதி காக்கும் படைக்கு எதிராக உண்ணா நோன்பிருந்து உயிர் தியாகம் செய்தவர் அன்னைபூபதி.

இன்றய நிகழ்வின் பொதுசுடரினை திருமதி ரஞ்சிதமலர் பிரபாகரன் மற்றும் நினைவு சுடரினை திரு ஈசன் அவர்களும் ஏற்றிவைத்தார்கள். திருவுருவத்திற்க்கான மலர் மாலையினை திரு றஞ்சித்தர் அவர்கள் அணிவித்ததை தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

SHARE