தேசத்தின் குரல்  பாலா அண்ணாவின்  11வது நினைவேந்தல்  நிகழ்வு.

0

1938 இல் தமிழீழத்தில் மலர்ந்து , எமது தேசத்தின் தேவையையும் , வலியையும் .. உலகெல்லாம் உணரச் செய்து  தனது  68 வது அகவையில்  வீரமரணமடைந்த வீரமகன்  “தேசத்தின்  குரல் ” அன்ரன் பாலசிங்கம் அவர்களின்  11  வது  நினைவேந்தல்  நிகழ்வானது  பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்பட்டது .

நிகழ்வின் முதல் நிகழ்வாக பொதுச் சுடரினை பிரித்தானிய இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் செல்வி சஞ்சு வசிகனேசன்  ஏற்றிவைத்தார்

ஈகை  சுடரினை மாவீரர் வேந்தன் அவர்களின் சகோதரன் செல்லத்தம்பி மகேந்திரன் ஏற்றி வைத்தார் தொடர்ந்து மலர்வணக்கம் மற்றும்  சுடர்வணக்கம் இடம்பெற்றது .  தேசத்தின் குரல்  பாலா அண்ணாவைப் பற்றி கவிதையை திருமதி உமா காந்தி மற்றும் திருமதி   ரேணுகா  உதயகுமார் வழங்கினார்கள் . எழுச்சி கானங்களை மயூரன் சதானந்தன் வழங்கினார் ,   சிறப்புரை ஆங்கில உரையினை தொடர்ந்து திருமதி ஆசிரியை விஜயராணி கிருஷ்ணராஜா மற்றும் நாட்டியாலய நடனப்பள்ளி ஆசிரியை திருமதி ஷர்மினி கண்ணன் ஆகியோரின் மாணவிகள் எழுச்சி நடனங்களை வழங்கினார்கள் .
நிறைவாக தமிழீழம் கிடைக்கும் வரை தொடர்ந்தும் பயணிப்போம் என்கின்ற உறுதிமொழியோடு நிகழ்வு நிறைவு பெற்றது .

SHARE