கொரோனா கொல்லுயிரி தாக்கத்தினால் உயிரிழந்த மக்களின் விபரத்தினையும் சேகரித்து ஆவணப்படுத்தும் முயற்சியிலும் நாம் ஈடுபட்டு வருகின்றோம்

0

அன்புக்குரிய அனைவருக்கும் வணக்கம்.
கொரோனா “கோவிட் 19″ எனும் கொடிய கொல்லுயிரி பல இலட்சம் மனித உயிர்களைக் காவு கொண்டதோடு இன்னும் பல இலட்சம் மக்களைப் பாதிப்புக்குள்ளாக்கி, நாள் தோறும் புள்ளி விபரங்களால் மனித குலத்தை புரட்டி எடுத்து வருகின்ற சூழமைவில்,
“இதுவும் கடந்து போகும்” என்ற நம்பிக்கையானது நாம் வாழும் இப்பூமியை இயக்கிக் கொண்டிருக்கிறது.
இத்தகைய வரலாற்று நகர்வில் எத்தனை தமிழ் மக்கள் உயிரிழந்தும், பாதிப்புற்றும், அதிலிருந்து மீண்டு வந்தனர் என்பதுவும் பதிவு செய்து பேணவேண்டிய பொறுப்பும் நம் கதவினை தட்டுவது கேட்கிறது.
கடந்த காலங்களில் கொலரா, மலேரியா, சுனாமிப் பேரலை போன்ற இயற்கை அனர்த்தங்களினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் இனவழிப்பிற்கு உள்ளான உயிரிழப்புகள், காணாமல் ஆக்கப்பட்டோர் என்னும் வரையறைகளுக்குள் திரட்டப்பெற்ற தகவல்கள், தரவுகள் போரின் நெருக்கடிக்குள் சிதறுண்டு, ஒருங்கிணைப்பின்றி முழுமை பெறாமல் போனது கவலைக்கிடமானதே.
இன்று புலம்பெயர் தேசத்தில் வாய்த்திருக்கும் சாதக தன்மையை பயன்படுத்தி தரவுகள் தகவல்கள் யாவும் திரட்டப்பெற்று தொகுக்கப்பட்டு வருகின்றமையானது வரவேற்க்கத்தக்கதே.
எனவே, கொரோனா கொல்லுயிரி தாக்கத்தினால் உயிரிழந்த மக்களின் விபரத்தினையும் சேகரித்து ஆவணப்படுத்தும் முயற்சியிலும் நாம் ஈடுபட்டு வருகின்றோம் என்பதை தெரியப்படுத்துவதுடன், தங்களால் ஆன ஒத்துழைப்பினையும் வேண்டி நிற்கின்றோம். முடிந்தவரை தரவுகளையும் தகவல்களையும் எமக்கு தந்து வரலாற்றைப் பேண உதவுவீர்கள் என நம்புகிறோம்.

முழுப்பெயர் :.…………………………………………………………………………
பிறந்த திகதி :………………………….. இறந்த திகதி: ………………………………..
முகவரி :…………………………………………………………….…………….
:………………………………………. Pழளவஉழனந:……………………..
தாயகமுகவரி. :…………………………………………………………………………
:…………………………………………………………………………
தகவல் தருபவர் :………………………..………………………………………………..
உறவுமுறை. :………………………………………………………………………
இவற்றைப் பூரணப்படுத்தி அத்துடன் புகைப்படத்தையும் இணைத்து எம் முகவரிக்கோ மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிவைக்கவும். – நன்றி.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

corona tcc 260620

SHARE