தமிழீழ மக்களின் அடையாளமான தேசியக்கொடியின் கீழ் அனைவரும் ஒன்றுபடுவோம் என்னும் செய்தியுடன் நிறைவடைந்தது 6ம் நாள் உண்ணாவிரதம்!

0

இன்று 16.05.2019 வியாழக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி வாரத்தின் 6ம் நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டமானது. காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் எழுச்சி உரையினைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு திரு வடிவேலு சுரேன் அவர்கள் அடையாள உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கு பழச்சாறு வழங்கி அடையாள உண்ணாவிரதத்தை நிறைவுக்கு கொண்டுவந்ததுடன், திரு உதயனன் அவர்கள் நமது அடையாளமான தேசியக் கொடியின் முக்கியத்துவத்தையும் அதன் கீழ் ஒன்றுபடவேண்டிய தேவையையும் உணர்த்தி உறுதிமொழி எடுத்ததைத் தொடர்ந்து இன்றைய எழுச்சி நிகழ்வு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

SHARE