23-09-17 அன்று நடைபெற்ற அடையாள உணவுத் தவிர்ப்பும், கொட்டொலிப் போராட்டமும் 

0

தியாக தீபம் திலீபன் அவர்கள் சாகும் வரையிலான உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தை  முன்னெடுத்து வீரச்சாவடைந்த 30 ஆவது ஆண்டு நினைவாக, அடையாள உணவுத் தவிர்ப்புப் போராட்டமும் சிறிலங்கா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்  அரசியற் கைதிகளை நிபந்தனை இன்றி விடுவிக்க வேண்டும் எனவும் காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பாக நீதி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி  கொட்டொலிப் போராட்டமும் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில்  போராட்டம் நடைபெற்றது.

இல 10, Downing Street முன்பாக நடைபெற்ற  இப்போராட்டமானது (23 செப்டம்பர் 2017) முற்பகல் 11 மணியளவில்  ஆரம்பமானது.

தமிழீழத் தேசியக்கொடியை பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியற் துறை ஒருங்கிணைப்பாளர் திரு செல்வகுமரன் அவர்கள் ஏற்றினார். ஈகச்சுடரை திரு  இந்திரன் அவர்கள் ஏற்றினார்.

திருவுருவப்படத்துக்கு  மலர் மாலையினை  திருமதி யதுனா அவர்கள் அணிவித்தார்.

அதைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட உணவுத்தவிர்ப்புப் போராட்டம்  மாலை 5.30 மணியளவில் நிறைவடைந்தது.

SHARE