ஈகையர் வணக்க நிகழ்வு

0

தீயில் காவியமாக ஐ நா முன்றலில் ஈகைப்பேரோளி முருகதாசும் தமிழகத்தில் ஈகைப்பேரோளி முத்துக்குமார் தொடக்கம் தியாகச்சுடர் வீரமங்கை செங்கொடி மற்றும் 22 ஈகையர்களுக்குமான வணக்க நிகழ்வு தென்மேற்கு லண்டன் பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் நினைவு கூறப்பட்டது . தமிழீழத் தேசியக்கொடியேற்றலோடு ஆரம்பமானது . தமிழீழ தேசிய கொடியினை கப்டன் உதயதீபன் அவர்களின் சகோதரரும் தமிழீழ செயற்பாட்டாளருமான திரு ஈசன் அவர்கள் ஏற்றி வைத்தார் .
ஈகை சுடரினை லெப்டினன் கேணல் மனோஷ் அவர்களின் சகோதரனும் மாவீரர் பணிமனை பொறுப்பாளருமான திரு கமல் அவர்கள் எற்றிவைத்தார். அகவணக்கத்தினை தொடர்ந்து திருவுருவத்திற்க்கான மலர்மாலை மற்றும் சுடர்வணக்கம் உணர்வுபூர்வமாக மக்களால் நிகழ்த்தப்பட்டது.

நிகழ்வில் எழிச்சி கனங்களை அபினயா மற்றும் மயூரன் , ஆங்கில உரையினை
ஷர்மிலா ஜெகன்மோகன்
நிகழ்வின் சிறப்புரையினை திரு மகேந்திரன் அவர்களும் எழுச்சி நடனங்களை நாட்டியாலயா பள்ளி மாணவர்கள் மற்றும் தமிழ் மிடில்செக்ஷ் மாணவர்களின் நடனம் ஆகியன இடம் பெற்றன.
இறுதியாக தமிழீழ தேசிய கொடி கையேந்தலுடன் தமிழீழம் கிடைக்கும் வரை தொடர்ந்து பயணிப்போம் என்கின்ற உறுதிமொழியோடு நினைவு வணக்கம் நிறைவு பெற்றது.

SHARE