எழுச்சி வணக்க நிகழ்வு

0

தியாக தீபம் திலீபன் அவர்களின் 34 ம் ஆண்டு , வான் படைத்தளபதி கேணல் சங்கர் அவர்களின் 20 ம் ஆண்டு கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்பு தளபதி கேணல் ராயு அவர்களின் 19 ம் ஆண்டு வணக்க நிகழ்வுகள் இன்று தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் இன்று லண்டன் இல்போட் பகுதியில் இடம் பெற்றது.

நிகழ்வில் பொது சுடரினை திரு திருமதி அனுரா தேவிகா அவர்கள் எற்றி வைத்தார்கள். தொடர்ந்து 1990 காலப்பகுதியில் இருந்து முள்ளி மண்வரை மருத்துவ பணி ஆற்றியவரும் போராளியுமான திரு ஜோன்சன் அவர்கள் தமிழீழ கொடியினை ஏற்றி வைத்தார். ஈகை சுடரினை தொடர்ந்து 1990 காலப்பகுதியில் இருந்து முள்ளி மண்வரை மருத்துவ பணி ஆற்றியவரும் போராளியுமான திரு தணிகை அவர்கள் ஏற்றிவைத்தார்கள். திரு உருவப்படத்திற்க்கான மலர் மாலையினை திருமதி அன்னலக்‌ஷ்மி ஜெயபாபு அணிவித்தார்கள். நிகழ்வில் எழுச்சி நடனம் , கவிதைகள் , நினைவு உரைகள் என பல நிகழ்வுகள் இடம் பெற்றன.

இறுதியாக தமிழீழ தேசிய கொடி கையேந்தப்பட்டு திலீபனின் கனவு நனவாகும் வரை பயணிப்போம் என்கின்ற உறுதி மொழியோடு நிகழ்வு நிறைவு பெற்றது.

SHARE