தாயக விடுதலைப் பயணத்தில் கலைஞர்களாக பயணிக்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்

  0

  தாயாக விடுதலைக்காக புலம் பெயர்ந்த தேசங்களில் பல தளங்களிலும் பணியாற்றி வருகின்ற எம் தமிழ் உறவுகளே, நீண்டு செல்லும் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் வீச்சுக்கு தாயகத்திலும் புலத்திலும் கலை பண்பாட்டுக் கழகத்தினதும் இத்துறையோடு உணர்வுடனும் அற்பணிப்புடனும் இணைந்து பணியாற்றி வருகின்ற கலைஞர்களின் பங்களிப்பானது எமது விடுதலையை வீச்சாக்கி நிற்கிறது.

  கடந்த காலங்கள் போல் இனிவரும் காலங்களிலும் அனைவரையும் உள்வாங்கி பிரித்தானியாவில் நடைபெறும் தேச விடுதலை சார்ந்த எழுச்சி நிகழ்வுகளிலும் போராட்ட நிகழ்வுகளிலும் கலை படைப்புக்களுக்கூடாக  விடுதலைக்கு வலுசேர்க்க முடியும் என்று எண்ணுகின்றோம். குறிப்பாக 2017 தமீழத் தேசிய மாவீரர் நாளுக்கான முதல் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இந் நிகழ்வில் நீங்களும் இணைந்து கொண்டு  பங்காற்ற விருப்பமெனில் எம்முடன் தொடர்பு கொள்ளலாம்.

  அனைவரும் இணைவதன் ஊடாக கவிதை , நடனம் நாடகம் ,பாடல், இசை ஆகிய கலை வெளிப்பாடுகளை ஒருங்கமைத்து எழுச்சி மிகு  கலைத்தளத்தில் பயணிக்க முடியும். எனவே நடன ஆசிரியர்களையும், நாடக இயக்குனர்களையும் பாடகர்களையும், இசைக் கலைஞர்களையும், கவியார்வலர்களையும், நிகழ்வுத் தொகுப்பாளர்களையும். ஆர்வமுள்ளவர்களையும் எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

  • 020 3371 9313
  • 074 7309 9933
  • 079 5527 2863

  நன்றி

  தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

  SHARE