இலண்டனை வசிப்பிடமாகக் கொண்ட இந்திரன் ஐயா அவர்கள் சாவடைந்தார்.

0

நீண்ட காலமாக இலண்டன் தென்மேற்கு பிராந்தியத்தியத்தில் Tooting பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட இந்திரன் ஐயா அவர்கள் வயது மூப்பின் காரணமாக சாவடைந்தார் என்ற செய்தி எம்மை பெருந்துயரில் ஆழ்த்தி இருக்கிறது. விடுதலைப் போராட்டத்தின் மீதும் தாயக மண்மீதும் பற்றுக்கொண்டதால் விடுதலைப் போராட்டத்திற்கு வேண்டிய பங்களிப்புகளையும் மாவீரர்நாள் மற்றும் நிகழ்வுகளுக்கான பங்களிப்புகளையும் தயக்கமின்றி தானாக முன்வந்து செய்தவர்.

பிரித்தானியாவில் எந்தப்பகுதியில் பேரணிகள், போராட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடக்கிறதோ அங்கே இந்திரன் ஐயா அவர்களைக் காணலாம். சீரற்ற காலநிலை காலங்களில் நடந்த போராட்டங்களிலும் பங்குகொண்டவர். வயது முதிர்ந்த காலத்திலும் மண்மீது கொண்ட பற்று அளப்பரியது.
இந்திரன் ஐயா உங்களை நாங்கள் மறவோம். உங்களது இழப்பு நிவர்த்தி செய்ய முடியாது. எங்கள் அனைவரையும் நிலைகுலைய செய்து, செய்வதறியாது நிற்கிறோம். ஐயா உங்களது தள்ளாத வயதிலும் தமிழீழம் நோக்கிய சிந்தனைச் செயற்பாடுகளில் காணக்கூடியதாக இருந்த தங்களது துடிப்பான எண்ணச் சிந்தனைகளை இனிமேல் யாரிடம் காண்போம் ஐயா?
ஐயா அவர்களுக்கு எமது கண்ணீர் வணக்கத்தை செலுத்துகின்றோம்.

SHARE