எழுகதமிழ் கலைஞர்களுக்கும்கலைப் படைப்புக்கள் ஊடாகத் தேசியப்பணியாற்றிவரும் ஆசிரியர்கள், மாணவக் கலைஞர்களுக்குமான வாழ்த்துகளுடன் கூடிய கலந்துரையாடலுக்கான சந்திப்பு

0

உரிமைக்காக எழு தமிழா கலைஞர்களுக்கும்கலைப் படைப்புக்கள் ஊடாகத் தேசியப்பணியாற்றிவரும் ஆசிரியர்கள், மாணவக் கலைஞர்களுக்குமான வாழ்த்துகளுடன் கூடிய
கலந்துரையாடலுக்கான
சந்திப்பு இன்று அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது. கடந்த 27/06/2022 திங்கள் பெல்ஜியத்தில் அமைந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் ஈழத்தமிழர் மக்களவை, தமிழ்இளையோர் அமைப்புடன் அனைத்து நாடுகளிலுமுள்ள தேசியக் கட்டமைப்பான
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்கள் இணைந்து எழுகதமிழ் போராட்டத்தை நடாத்தியிருந்தனர். தமிழின அழிப்பிற்கான நீதி வேண்டிய போராட்டத்தில் பிரித்தானியாவில் இருந்து நூற்றுக் கணக்கான தேசாபிமானிகள் பங்கேற்றிருந்தனர்.
இவ்வெழுச்சி நிகழ்வில்
இறுதி நிகழ்வாக அமைந்த நடனமானது
அனைத்து மக்களாலும்
உணர்வு பூர்வமாக பாராட்டப்பட்டது. இந்நடனத்தை பரத நாட்டிய ஆசிரியைகளான றாஜினி றாஜகோபால், சர்மினி கண்ணன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் அவர்களின் மாணவிகள் வழங்கி இருந்தார்கள்.
இந்நடனத்தைப் பல்லாயிரக் கணக்கான
மக்கள் தமிழ்த்தேசியத் தொலைக் காட்சி ttn.tv
மற்றும் சமூக வலைத்தளங்களிலும்
பார்வையிட்டார்கள். இன்றைய சந்திப்பில் தேசியக் கலைஞர்களின் தாயகம் நோக்கிய காத்திரமான கலைப்படைப்புகளின் தயாரிப்புக்களின் காலத்தின் அவசியம் பற்றி கலந்துரையாடப்பட்டது. இன்றைய நிகழ்வில் அனைத்துலகப் பொறுப்பாளர், நிர்வாகப் பொறுப்பாளர்கள் இணையவழி ஊடாக கலந்து கருத்துரைகளை வழங்கி இருந்தனர். இன்றைய நிகழ்வின் ஒருங்கிணைப்பை பிரித்தானிய கலை பண்பாட்டுப் பிரிவினர் ஒழுங்கமைத்திருந்தனர்.

SHARE