வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 29ஆவது ஆண்டு நினைவெழுச்சி நாள்

0

16.01.1993 அன்று தமிழீழம் நோக்கி எம்.வி அகத் என்னும் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தவேளை இந்திய அரசின் நயவஞ்சகச் சதியினால் வங்கக்கடலில்
வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 29ஆவது ஆண்டு நினைவெழுச்சி நாள் – 16.01.2022 வீரத்தின் வித்துகளின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு மோடன் பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரினால் நடாத்தபட்டது.

இன்றைய நிகழ்வின் பொதுச்சுடரினை திருமதி வியஜராணி அவர்கள் ஏற்றிவைத்தார்கள். தமிழீழ தேசியக்கொடியினை தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் மாவீரர் பணிமனைப்பொறுப்பாளர் திரு. அசோகன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள். ஈகைச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் நீண்டகால செயற்பாட்டாளர் திரு. கோவிந்தன் பத்மன் அவர்கள் ஏற்றிவைத்ததை தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் வடமேற்கு பிராந்திய துணைப் பொறுப்பாளர் திரு குகன் அவர்கள் திருவுருவப்படத்திற்க்கான மலர் மாலையினை அணிவித்தார்.

நிகழ்வின் கலை நிகழ்வுகளாக நடனம், கவிதை தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் அரசியற்துறை பொறுப்பாளர் நியூட்டன் அவர்களின் உரை என்பன இடம் பெற்றது.

தமிழீழத் தேசிய கொடி கையேந்தப்பட்டு
மாவீரர்களின் கனவை நனவாக்குவோம் என்ற உறுதியோடு நிகழ்வானது நிறைவுபெற்றது.

 


SHARE