25வது ஆண்டு வீர வணக்க நிகழ்வு

  0
  தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் வைத்து இந்திய கடற்படை முற்றுகையிட்ட வேளை பாரத அரசின் நயவஞ்சகத்தால் 16.01.1993 அன்று கப்பலுடன் தம்மைத் தாமே தீயிட்டு அழித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களான
  கேணல் கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார் – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)
  லெப்.கேணல் குட்டிசிறி (இராசையா சிறிகணேசன் – சுதுமலை வடக்கு, மானிப்பாய்)
  மேஜர். வேலன் / மலரவன் (சுந்தரலிங்கம் சுந்தரவேல் – வியாபாரிமூலை, பருத்தித்துறை)
  கடற்புலி கப்டன் குணசீலன் / குணராஜ் (சேகரன்குருஸ் மைக்கல் ஜீவா – 2ம் குறுக்குத்தெரு, உதயபுரம், மணியம்தோட்டம்)
  கடற்புலி கப்டன் றொசான் (இரத்தினசிங்கம் அருணராசா – அரசடி வீதி, நல்லுர், யாழ்ப்பாணம்)
  கடற்புலி கப்டன் ஜீவா (நடராசா மார்க்ஜெராஜ் – கொய்யத்தோட்ட ஒழுங்கை, யாழ்ப்பாணம்)
  கடற்புலி லெப். தூயவன் (மகாலிங்கம் ஜெயலிங்கம – கண்டிவீதி, யாழ்ப்பாணம்)
  கடற்புலி லெப். நல்லவன் (சிலஞானசுந்தரம் ரமேஸ் – மணியந்தோட்டம், கொழும்புத்துறை யாழ்ப்பாணம்)
  கடற்புலி லெப். அமுதன் (அலோசியஸ் ஜான்சன் – 2.ம் குறுக்குத்தெரு, நாவாந்துறைவடக்கு, யாழ்ப்பாணம்)
  இவர்களுடன் கப்டன் விஜய் ஆகியோரின்
  25வது ஆண்டு வீர வணக்க நிகழ்வு இன்று சட்டன் பகுதியில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழிவினால் முன்னெடுக்கப்பட்டது .
   திருமதி . வதனி தெய்வேந்திரன் அவர்கள் பொதுச்சுடரை  ஏற்றி வணக்க நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார் .தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியினை திரு செல்வாகுமரன் ஏற்றிவைத்தார் . ஈகைச்சுடரை திரு இந்திரன் ஐயா ஏற்றி வைத்தார் .மண் மீடுப்பு போரிலே வீரசவினை தழுவிக்கொண்ட மாவீரர்கள் மக்கள் அனைவருக்காக அகவணக்கம் செலுத்தப்பட்டது .திருஉருவத்திற்க்கான மலர்மாலையினை திரு சர்வானந்தன் அவர்கள் அணிவித்தார் அதனை தொடர்ந்து பொதுமக்கள்
   அனைவரும் மலர்வணக்கமும் சுடர்வணக்கமும் நிகழ்த்தினார்கள் .தொடர்ந்து கிட்டு நினைவு சுமந்த  கவிதைகளை திரு .தாஸ் மற்றும் திரு .தயாசீலன் வழங்கினார்கள் . எழுச்சி கானங்களை திரு .மயூரன் மற்றும் திரு .கிருபா அவர்கள் பாடினார்கள் . செல்வி .சகி பத்மலிங்கம் மற்றும் ஆசிரியை திருமதி. விஜயராணி கிருஷ்ணராஜ் அவர்களினதும் மாணவிகள் எழுச்சி நடனம் வழங்கினார்கள் . பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு சார்பாக திரு .நியூட்டன் உரை ஆற்றினார் . தொடர்ந்து தமிழீழ தேசிய கோடி
  கையேந்தலுடனும் தமிழீழ விடுதலைக்காய் தொடந்தும் பயணிப்போம் என்ற உறுதிமொழியோடு வணக்க நிகழ்வு நிறைவு பெற்றது

  SHARE