பேருந்துகள் நூற்றுக்கணக்கான மக்களுடன் பெல்ஜியம் நோக்கி பயணிக்க ஆரம்பமாகியுள்ளது.

0

இன்று 27/06/22 பெல்ஜியத்தில் நடைபெறவுள்ள எழுதமிழா போராட்டத்திற்கு
பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்துகளிலும் சொந்தவாகனங்களிலும் அணிதிரண்ட பல நூற்றுக்கணக்கான மக்கள்!

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பிற்கான
நீதிக்காகவும் தமிழீழ மக்களின் தனியரசிற்கான சுதந்திரத்திற்காகவும் 27/06/2022
திங்கள் ஐரோப்பிய ஒன்றியம் முன் நடை பெறும் நீதிக்கான போராட்டமும் தமிழ்த் தேசியத்தின் நீதிக்கும்
தமிழீழ விடுதலைக்குமான போராட்டக் களமாக வராலாற்றில் பதிவாகும்
என்ற நம்பிக்கையோடு
தேசாபிமானிகளின் பெல்ஜியம் நோக்கிய தமிழீழத்திற்கான
பயணம் தொடர்கின்றது.

திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஜுன் 27 திங்கள் அன்று காலை 11 மணிக்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் நடைபெறும் உரிமைக்காக எழுதமிழா மாபெரும் போராட்டத்தின் நேரலை TTN தமிழ் தேசிய தொலைக்காட்சியில் நீங்களும் காணலாம். ஐபோன் அன்ரொட் கைதொலைபேசிகளிலும் மற்றும் சாலை ரீவீ IPTV pox ஊடாகவும் காணலாம்.

 

 

 

SHARE