முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி நினைவு வணக்க நிகழ்வு மற்றும் இந்த மாதத்தில் காவியமான மாவீரர்களுக்குமான நினைவு வணக்க நிகழ்வு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் வட மேற்கு பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்டது .
தமிழீழ தேசிய கொடியினை தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாட்டாளர் செல்வன் அவர்கள் ஏற்றி வைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார் தொடர்ந்து ஈகைச்சுடரினை மாவீரர் லெப்டினன் அச்சுனன் அவர்களின் சகோதரன் ரோச் நிக்கோலஸ் ஏற்றி வைத்தார் தொடர்ந்து திரு உருவத்திற்க்கான மலர் மாலையை தமிழர் ஒருங்கிணைப்பு குழு செயட்பாட்டாளர் திருமதி யோகம் பத்மநாதன் அவர்கள் அணிவித்தார் .
நிகழ்வில் watford கல்விக்கூட மாணவிகளின் நடனம், நாட்டியலயா மாணவிகளின் நடனம் south harrow தமிழ் கல்வி கூட மாணவிகளின் நடனம் ஊடகவியலாளர் ச ச முத்து அவர்களின் நினைவுரை, சமகால அரசியல் தொடர்பாக திரு சதா அவர்களின் எழுச்சி உரை, எழுச்சி கானங்களை திரு. மயூரன் திரு.ரூப தாஸ் , சுதர்ஷினி படியிருந்தார்கள் தாஸின் எழுச்சி கவிதை புதுமை பெண் என்கின்ற தலைப்பில் திரு வேல்தர்மா உரை நிகழ்த்தியிருந்தார் .
தேசிய கொடி கையேந்தலுடன் மாலதியின் கனவை நனவாக்குவோம் என்கின்ற உறுதி மொழியோடு
நிகழ்வானது நிறைவு பெற்றது