தமிழர்திருநாள் 2018 மிடில்ஸ்பரோ (Middilesbrough)

  0
  தமிழர் திருநாள் 2018 மிடில்ஸ்பரோ மாநிலத்தில் வெளிமாவட்ட தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் 03-02-2018 சனிக்கிழமை மிகசிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
  Trinity Centre , James street, North Ormesby , Middlesbrough ல் முன்னெடுக்கப்பட்ட தமிழர்திருநாளில் ஆரம்ப நிகழ்வான பொதுச்சுடரினை லெப்டினன் கேணல் பாவலன் கப்டன் தயாபரன் லெப்டினன் பாமதி ஆகிய மூன்று மாவீரர்களின் தந்தையான விஜயரட்ணம் மற்றும் தமிழ் கலாச்சார மன்ற உபதலைவர் றொபேர்ட் ஆகியோர் ஏற்றி வைக்க தமிழீழ தேசிய கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வெளிமாவட்ட நிதிப்பொறுப்பாளர் மனோ ஏற்றி வைத்தார். மண்ணுக்காக தம் உயிர் நீத்த மாவீரர்கள் மக்கள் நாட்டுப்பற்றாளர்களுக்கான அகவணக்கத்தைத் தொடர்ந்து கோபிகா விக்னேஸ்வரன் அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது
  கஜன் சுகர்ரிகாவின் வரவேற்பு நடனத்துடன் கோபிகா சுவர்னிகா  விதுஷன் ஆகியோரின் நடனமும் இடம்பெற்றது .
  தொடர்ந்து சிவரூபன் அவர்களின் மாணவர்கள் வழங்கிய தமிழர் திருநாள் பற்றிய விளக்கவுரையை தொடர்ந்து எம் தேசியக்கொடியேந்தல் இடம்பெற்றது . எமதாரக மந்திரமான
  நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றது . 
  SHARE