தமிழின அழிப்பிற்கான நீதி வேண்டிய மிதியுந்துப் பயணம் இன்று கொலண்டில் (Netherland)

0

நேற்றைய தினம் (02/09/2021) பிரித்தானியாவிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட தமிழின அழிப்பிற்கான நீதி வேண்டிய மிதியுந்துப் பயணம், பேரெழுச்சியோடு பயணித்து இன்று கொலண்டில் (Netherland) இருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தமிழ் மக்களுக்கான நீதிவேண்டிய மனு கையளிக்கப்பட்டது. தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளூடாக பயணித்து ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா மன்ற திடல்நோக்கி எழுச்சியோடு பயணித்து வருகின்றது. நேற்றைய போராட்டத்தின் போது பிரித்தானியாவின் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்
கட்சிகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கோரிக்கை மனுக்களை கையளித்ததுடன், தமிழ் மக்களின் அரசியற்தீர்வாக சிறிலங்கா தேசம் தமிழ்மக்கள்
மீது நடாத்தி வரும் திட்டமிட்ட இனவழிப்பின்
வரலாற்றை தெளிவுபடுத்தி தமிழ் மக்களுக்கான நிரந்தரத்
தீர்வாக தமிழீழ தேசமே அமைய வேண்டும் என்பதையும் வலியுறுத்திய கோரிக்கைமனு வெளிவிவகார அமைச்சுக்கும் பிரதமருக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் கையளிக்கப்பட்டது.

SHARE