லெப்.கேணல் குமரப்பா லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு நினைவெழுச்சி நாள்

0

இலங்கை இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு நினைவெழுச்சி நாள் லண்டனில் சட்டன் பகுதியில் நினைவு கூறப்பட்டது .
நிகழ்வினை பொதுச்சுடர் ஏற்றி திருமதி சர்மிளா ஜெகன்மோகன் ஆரம்பித்து வைத்தார்
தமிழீழ தேசிய கொடியினை தமிழீழ விடுதலை போராட்டத்தில் தலைவரோடு இணைந்து கொண்ட முதலாவது போராளி கலாபதி ஏற்றிவைத்தார் . தொடர்ந்து ஈகைச்சுடரினை லெப்டினன் கேணல் ரட்ணத்தின் சகோதரி சுகந்தினி ஏற்றி வைத்தார் .
தாயாக விடுதலை போரிலே வீரச்சாவை தழுவி கொண்ட மாவீரர்களையும் மக்களையும் நினைவில் நிறுத்தி அகவணக்கம் செலுத்தபட்டது .

தொடர்ந்து திருஉருவத்திற்க்கான மலர்மாலையை திருமதி சுபா அணிவித்தார் .
தொடர்ந்து மக்கள் மலர்வணக்கம் மற்றும் சுடர் வணக்கம் செலுத்தினார்கள் .
நிகழ்வில் எழுச்சி கானங்கள் , எழுச்சி நடனங்கள் , நினைவெழுச்சி உரைகளை தொடர்ந்து 2018 ல் எக்ஸ்ல் மண்டபத்தில் நடைபெற இருக்கும் மாவீரர் நாள் விடயங்கள் மக்களுடன் பகிரப்பட்டு துண்டு பிரசுரங்களும் கையளிக்க பட்டது . இறுதியாக தமிழீழ தேசிய கொடி கையேந்தலுடன் தமிழீழம் கிடைக்கும் வரை தொடந்து பயணிப்போம் என்கின்ற உறுதி மொழியோடு நிகழ்வானது நிறைவு பெற்றது .

SHARE