தமிழர் புத்தாண்டு தைப்பொங்கல் விழா

0
தமிழர் புத்தாண்டு தைப்பொங்கல் விழா , பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் மிகச்சிறப்பாக லெஸ்டர் மாநகரத்தில் இடம்பெற்றது .நிகழ்வின் ஆரம்பமாக பிரித்தானிய கொடியை Azim Walters – Solicitor ஏற்றிவைத்தார் , தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியினை  பிரித்தானிய   தமிழர் ஒருங்கிணைப்பு குழு லெஸ்டர்
பொறுப்பாளர் மனோ ஏற்றிவைத்தார் . மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் உயிர் நீத்த மாவீரர்கள் மக்கள் அனைவருக்குமாக அகவணக்கம் செலுத்தத்தப்பட்டது .
மங்கள விளக்கினை    திரு கனகலிங்கம் நிருவாக்கத்தலைவர் , தமிழ்கல்விக்கூடம் லெஸ்டர்,சக்தி சூரியப்பிரகாசம் , ஜெனிற்றா இராஜ்குமார் அவர்கள் ஏற்றி தைப்பொங்கல் விழாவினை ஆரம்பித்து வைத்தார்கள் .
வரவேற்பு நடனத்தை ஆசிரியை  தர்மினி சிவதீஸ் அவர்களின் மாணவிகள் வழங்கினார்கள் .தொடர்ந்து கொவென்ட்ரி தமிழ் கல்விக்கழக மாணவிகள், ஆசிரியை சத்தியகௌரி சத்தியசீலன் நெறியாழ்கையில்  குழு நடனமொன்றை வழங்கினார்கள் . ஜெனிற்றா இராஜ்குமார் அவர்களின் கவிதை , லெஸ்டர் கல்விக்கூட மாணவிகள் சுவேதா  சுரேஷ்குமார் மற்றும் கோபிகா மோகன் அவர்களின் பாடல் , லெஸ்டர் கல்விக்கூட மாணவர்கள் திராவியன்  மகேந்திரராஜா , இலட்சியா மகேந்திரராஜா  ஆகியோரது  பேச்சு ஆகிய கலை நிகச்சிக்கல் இடம்பெற்றன .
தைப்பொங்கல் வாழ்த்துரைகளை  Councillor Manjula Sood , Councillor Daine Cank, மற்றும்   Azim Walters – Solicitor வழங்கினார்கள்.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் உரையினை திரு கோபி சிவந்தன் வழங்கினார். அன்றய நாளின் சிறப்பு கலை நிகழ்வாக நையாண்டி மேளம் புகழ் தயாநிதி சுதா அவர்களின் நிகழ்வு அமைந்தது லெஸ்டர் கல்விக்கூட மாணவிகளான நிதோசா அற்புதன்  மற்றும் ஜனனி ஆனந்தகுமார் நிகழ்ச்சிகளை அழகுற தொகுத்துவழங்கினார்கள் .
தேசியக்கொடிகள் கையேந்தலுடனும் ,தமிழீழ விடுதலைக்காக தொடர்ந்தும் பயணிப்போம் என்கின்ற உறுதி மொழியோடு தைப்பொங்கல் விழா நிறைவு பெற்றது.
SHARE