புள்ளிகள் கரைந்தபொழுது நாவல் அறிமுகநிகழ்வு

0

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் எற்பாட்டில் 26.1. 2020 அன்று பிரித்தானியாவின் Surray மாநிலத்தின் Sutton நகரில் நடைபெற்ற புள்ளிகள் கரைந்தபொழுது நாவல் அறிமுகநிகழ்வில்  விளக்கேற்றல், தேசியக்கொடியேற்றலை தொடர்ந்து கவிஞர் தமிழ் உதயா வரவேற்புரையை வழங்கினார்.
நாவல் குறித்தும் நாவல் ஆசிரியர்குறித்தும் அறிமுக உரையினை புலவர் கந்தையா இராஐமனோகரன் நிகழ்த்தினார். Sutton நகர உள்ளூராட்சி அவை உறுப்பினர் பிரேம் நந்தா அவர்கள் சிறப்புரை ஆற்றி நிகழ்வைச் சிறப்பித்தார்.
நூலுக்கான மதிப்புரை மற்றும் நயப்புரையினை திருமதி மாதவி சிவலீலன், ஆய்வாளர் கோபி இரட்ணம் ஆகியோர் ஆற்றினார்கள். தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் வெளியீட்டுப் பிரிவினர் நினைவுப் பரிசு வழங்கி நூலாசிரயரை மதிப்பளிப்பு செய்தனர். தொடர்ந்து நாவலின் படிகள் வழங்கப்பட்டன. நூலாசிரியரின் உரையை அடுத்து, நூல்வெளியீட்டு அணியின் சார்பில் நன்றியுரையினை எழுத்தாளர் நிவேதா உதயன் வழங்கினார். நிகழ்விற்கு நூற்றுக்கும் அதிகமானோர் வருகைதந்து சிறப்பித்தனர். ஒருங்கிணைப்பு குழுவின் மகளிர் அணியினர் நிகழ்வுக்கு வருகை தந்த அனைவருக்கும் தேநீர், சிற்றுண்டிகள் வழங்கியதோடு இரவுணவும் வழங்கி தமிழர் விரந்தோம்பற் பண்பாட்டினைச் சிறப்பித்தனர்.


SHARE