அனைத்துத் தமிழ் அமைப்புகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் கையொப்பமிட்டு தமிழினவிடுதலைக்கான பணியில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

0

ஜ.நா சபை தீர்மானங்கள் எங்களுக்கு சாதகமாக அமையாத நேரத்தில், சர்வதேச நாடுகள் ஈழ தேசத்தை தங்களுடைய நலனுக்காக பாவிக்க முயலும்போது எங்களுடைய அரசியலை,குமுகாய (சமுதாய) கட்டமைப்புக்களைப் பலப்படுத்தி எங்களுடைய விடுதலையை வென்றெடுக்க வேண்டியது எங்களுடைய கடமையாக இருக்கின்றது.

பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் வாதிகளையும் சிந்தனையாளர்களையும் எங்கள் பக்கம் திருப்பவேண்டியதும், எங்களுடைய விடுதலையை ஆதரிக்க வைக்கவேண்டியதும் பிரித்தானியா வாழ் தமிழர்களின் கடமை ஆகும்.

எங்கள் அரசியலை ஜ.நா தீர்மானங்களுக்குள் முடக்கிவிடலாம் என்ற சதி நடக்கின்றது. காலத்தை நீடித்து எங்களின் விடுதலை உணர்வை மழுங்கடிப்பதே உலக வல்லரசு நாடுகளின் திட்டமாகும். நாங்கள் தனித்துவமான இனம் , எங்களுக்கு நடந்தது, நடைபெற்றுக்கொண்டு இருப்பது திட்டமிடப்பட்ட தமிழினஅழிப்பு. இனப்படுகொலைக்கான நீதி கோரி பன்னாட்டு விசாரணையும் ,தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பும் நடத்தப்படுவதுனூடாகவுமே எமக்கான உரிமைகளை வென்றெடுக்க முடியும். தாயகம், தேசியம், தன்னாட்சி சுயநிர்ணய உரிமை என்ற எங்களின் கோட்பாட்டை நெஞ்சில் நிறுத்தி தமிழீழம் நோக்கி தொடர்ந்து பயணிப்போம் என்று உலக நாடுகளுக்கு தெரியப்படுத்துவோம்.

இந்த அறிக்கையில் எங்களுக்கு நடப்பது இனஅழிப்பு என்றும், இலங்கை தேசத்துக்குள் தமிழர்களுக்கு எந்தத் தீர்வும் சாத்தியமற்றது என்ற உண்மையை உணர்ந்து உலக நாடுகள் ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமை மற்றும் இறைமையை அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்த கையொப்ப படிவத்தை உலக நாடுகளுக்கும் மற்றும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட உள்ளது.

அனைத்துத் தமிழ் அமைப்புகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் கையொப்பமிட்டு தமிழினவிடுதலைக்கான பணியில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Calling UK Member of Parliaments to recognise Eelam Tamils Right to Self-determination and Sovereignty in the island of Sri Lanka (1)

 

SHARE