தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு எழுச்சி நாள்

0

யாழ்ப்பாணம் ஊரெழுவில் நவம்பர் 27, 1963 ஆம் ஆண்டு பிறந்தார் திலீபன். தந்தை செல்வாவின் அகிம்சை போராட்டம் தோல்வியடைந்த பின்பு இலங்கைத் தமிழர்கள் ஆயுத போராட்டத்தைக் கையில் எடுத்தனர். ஆரம்பத்தில் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்ட திலீபன் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி ஐந்து கோரிக்களை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்தார். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தண்ணீர் அருந்த  போவதில்லை என்று அறிவித்தார். ஆனால் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் உண்ணாவிரதத்தின் பனிரெண்டாம் நாளான செப்டம்பர் 26 1987 ல் வீரச்சாவடைந்தார்.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்ற அவருடைய வார்த்தைகளோடு இன்றய எழுச்சி நாள் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்துடன் இன்று காலை 10 மணிக்கு பிரதமர் வாசல்ஸ்தலம் முன்பாக ஆரம்பமாகியது .
நிகழ்வாவினை முன்னாள் போராளி திரு கனி அவர்கள் ஈகை சுடரினை எற்றி வைத்து ஆரம்பித்தார்.
திரு உருவ படத்திற்க்கான மலர் மாலையினை முன்னாள் போராளி திரு சுதர்சன் அணிவித்தார்.

தொடர்ந்து மாலை வணக்க நிகழ்வுகள் இடம் பெறும்.

SHARE