தமிழர் விளையாட்டு விழா 2022

0

பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரால் நடாத்தப்படும் மாபெரும் விளையாட்டுவிழா.

இன்று 29-05-22 ஞாயிற்றுக்கிழமை Roundshaw Playing Fields ல் ஆரம்பமாகியுள்ளது.

நிகழ்வானது பொதுசுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது.
தொடர்ந்து பிரித்தானிய தேசியக் கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விளையாட்டுத்துறையைச் சேர்ந்த திரு.ஜீவன் அவர்களும் தமிழீழத் தேசியக் கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் திரு. கோதை அவர்களும் ஏற்றி வைத்தார்கள். அகவணக்கத்தினைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது.

முதன்முறையாக பெண்களுக்கான மென்பந்துத்துடுப்பாட்டம் இடம்பெறுகிறது.
அத்தோடு உதைபந்தாட்டம்,
துடுப்பாட்டம், வலைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம்,
சிறுவர்களுக்கான விளையாட்டுகளும் மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டுகளும் இடம்பெறுகிறது.

ஈழமண்ணின் அறுசுவை உணவுகளை சுடச்சுட தயார் செய்துதருகின்றோம்.
நல்வாய்ப்புச் சீட்டிழுப்பும் இடம்பெறுகிறது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் குடும்பத்தோடுவந்து விளையாடி, உண்டு மகிழ வாருங்கள்.

SHARE