2ம் லெப் மாலதி அவர்களின் நினைவு வெற்றிக்கிண்ணத்திற்கான வலைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி நிகழ்வுகள்

0

2ம் லெப் மாலதி அவர்களின் நினைவு வெற்றிக்கிண்ணத்திற்க்கான வலைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி இன்று லண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு எற்பாட்டில் 34 அணிகள் உள்ளடங்கலாக பெண் வீரங்கனைகள் பங்குபற்றி இருந்தார்கள்.
நிகழ்சியின் ஆரம்பமாக தமிழீழ தேசியக்கொடியினை தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி பாப்ரா ராஜன் எற்றிவைத்தார். பிரித்தானியத் தேசியகொடியினை விளையாட்டுத்துறை செயற்பாட்டாளர் ஜீவன் எற்றிவைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் 9 வயதிற்க்கு உட்பட்ட போட்டியில் MTN Green அணியினரும் ,11 வயதிற்க்கு உட்பட்ட போட்டியில் MTN Yellow அணியினரும், 13 வயதிற்க்கு உட்பட்ட போட்டியில் MTN Purple அணியினரும் , 15 வயதிற்க்கு உட்பட்ட போட்டியில் KNC அணியினரும் , 40 வயதிற்கு மேற்பட்ட பிரிவில் MTN , அனைத்து பிரிவினரும் பங்கு பற்றிய போட்டியில் New life A அணியினரும் வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தினை பெற்று கொண்டார்கள்.
தேசிய கொடிகள் கையேந்தப்பட்டு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

SHARE