வீரவணக்க நிகழ்வு

0

லெப் கேணல் குமரப்பா, லெப் கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு மறவர்களுக்கும் 2ம் லெப் மாலதி மற்றும் இம்மாதத்தில் காவியமானவர்களுக்குமான வீர வணக்க நிகழ்வு இன்று லண்டன் மிச்சம் பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரினால் முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய நிகழ்வில் பொதுச்சுடரினை திரு கந்தையா சின்னராசா அவர்கள் ஏற்றி வைத்தார்கள். ஈகைச் சுடரினை
திரு புலேந்திரன் தர்மசீலன் அவர்கள் எற்றிவைத்தார்கள்.
திருவுருவப்படங்களுக்கான மலர் மாலைகளை திருமதி சுபா மற்றும் திருமதி றஜனி அணிவித்தார்கள்.

நிகழ்வில் நினைவு சுமந்த கவிதைகள் மற்றும் எழுச்சி நடனம் இடம் பெற்றது. தொடர்ந்தும் ஈழம் நோக்கிய பயணம் தொடரும், எனும் உறுதிமொழியோடு நிகழ்வானது நிறைவு பெற்றது.

SHARE