மன்னார்மறைமாவட்டமுன்னாள்ஆயர்வணகக்த்துக்குரியகலாநிதி இராயப்பு யோசப் ஆண்டகை 01.04.2021 அன்று சாவடைந்தார் என்ற செய்தி ஈழத்தமிழ் மக்களாகிய எம்மைப் பெரும்துயரில் ஆழ்த்தியுள்ளது. இனஒடுக்குமுறைகளுக்குள்ளாகித் துயரம் சுமந்துநிற்கும் தமிழ்மக்களின் உண்மையான விடுதலையுணர்வைப்புரிந்தும் தெரிந்தும் கொண்டிருந்தவர் இந்தப் பெருமகனார். இறை சேவையுடன் மகத்தான மக்கள் சேவையையும் ஆற்றி மறைந்த ஆண்டகை இராயப்பு ஜோசப் அவர்களின்புகழ் உடல் அவர் ஆழமாக நேசித்த தமிழ் ஈழ மண்ணுடன் இரண்டறக் கலந்தாலும் தமிழர்கள் அனைவரினதும்உள்ளங்களிலும் அன்னார் என்றும் வாழ்ந்து கொண்டே...
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான உரிமைப் போராட்டத்திற்கு புரட்சிகர ஆதரவை வழங்கவேண்டும் என்ற எமது பிரித்தானிய மக்களின் தன்னெழிச்சி அறை கூவலுக்கு செயல் வடிவம் கொடுக்கும் தார் மீக வேண்டுகைக்கமைவாக TCC-UK கிளையானது பிரித்தானியாவின் வீதிகளில் மிகப் பெரும் கவனயீர்ப்பு வாகனப் பேரணியை சுகாதார விதிமுறைகழுக்கமைவாக போராட்டக் களத்தை நெறிப்படுத்தி வருகின்றது. இரண்டு இடங்களில் இருந்து பேரணி ஆரம்பமாகியது ( BRACHENHILL, HA4 0JH மற்றும் Aldersbrook Rd, E12 5DH ) ...
அன்பார்ந்த தமிழீழ மக்களே! தமிழீழத்தின் யாழ் பல்கலைக்கழகம் என்பது தமிழினத்தின் வரலாற்றின் தேசிய எழுச்சிக்கான சனநாயகத்தின் தூணாக பல ஆண்டுகளாக நிமிர்ந்து நிற்கும் கல்விசார் வளாகமாகும். எனவேதான் தம்மால் நிகழ்த்தப்பட்ட நிகழ்த்தப்பட்டு வருகின்ற மிகக்கோரமான இனப்படு கொலையை அனைத்துலகத்தின் உயர் தளங்களுக்கு தாங்கிச் செல்லும் வலுவான ஆயுதமாகவும் நீதிக்கான போராட்டத்தின் கருவியாகவும் யாழ் பல்கலைக்கழக வளாகமானது செயற்படுவதைப் புரிந்து கொண்ட சிங்களதேசம் தனது படைவலுவை ஆயுதம் தாங்கி அரணமைத்து, தனது...