நவம்பர் 20ம் திகதிக்கு முன்னர் ஓவியங்களைப் பெற்றுக்கொள்ள, தமிழ்ப் பள்ளிக்கு எமது செயற்பாட்டாளர்கள் வருகை தருவார்கள். பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கலை பண்பாட்டுக் கழகப் பிரிவின் நடுவர்களால் போட்டியின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும். பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் உரிய சான்றிதழ்கள் தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.
பிரித்தானியா, நொட்டிங்காம் நகரில் தமிழ்க் கல்விகூட மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்விக்கூட நிர்வாகிகள் இணைந்து தமிழர் திருநாளைச் சிறப்பாகாகக் கொண்டாடினார்கள். மங்களவிளக்கு ஏற்றலுடன் ஆரம்பித்த நிகழ்வு பண்பாட்டு முறையில் நடைபெற்ற பொங்கலில் மாணவர்களும் இணைந்து பொங்கி மகிழ்ந்தார்கள். பாரம்பரிய முறையில் பந்தி வைத்து தலைவாழையிலையில் உணவுகள் பரரிமாறப்பட்டது சிறப்பம்சமாக அமைந்தது. வாடி வாசல் நாடகம் உட்பட பல கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது. ...
தமிழர் திருநாள் லெஸ்ரர் மாநிலத்தில், தமிழ் உறவுகளால் வெகுசிறப்பாக பெருவிழாவாக கொண்டாடப்பட்டது. 18-01-2020 சனிக்கிழமை மண்டபம் நிறைந்த மக்களோடு நடைபெற்ற இவ்விழா மங்களவிளக்கேற்றலுடன் ஆரம்பமானது. மங்களவிளக்கை எம்மவர்களுடன் இணைந்து லெஸ்ரர் நகரசபை உறுப்பினர்களும், நகரசபை துணை முதல்வரும் ஏற்றி வைக்க விழா இனிதே ஆரம்பமானது. பிரித்தானியத் தேசியக்கொடியை தமிழர் நலன்புரிச் சங்கத்தின் பொருளாளர் திரு. கந்தசாமி சங்கரன் ஏற்றி வைக்க எமது தமிழீழ தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் லெஸ்ரர் மாநிலப்பொறுப்பாளர்...
எழுச்சி பூர்வமாக காவிய நாயகர்களுக்கான வீர வணக்கம் ஸ்கோட்லேண்ட் மண்ணிலும் மக்களால் கார்த்திகை பூக்களை மாவீரர்களின் பாதங்களில் தூவி வண்க்கம் செலுத்தினார்கள்.