இராயப்பு ஜோசப் ஆண்டகை_ வணக்க நிகழ்வு

0

மன்னார்மறைமாவட்டமுன்னாள்ஆயர்வணகக்த்துக்குரியகலாநிதி இராயப்பு யோசப் ஆண்டகை 01.04.2021 அன்று சாவடைந்தார் என்ற செய்தி ஈழத்தமிழ் மக்களாகிய எம்மைப் பெரும்துயரில் ஆழ்த்தியுள்ளது. இனஒடுக்குமுறைகளுக்குள்ளாகித் துயரம் சுமந்துநிற்கும் தமிழ்மக்களின் உண்மையான விடுதலையுணர்வைப்புரிந்தும் தெரிந்தும் கொண்டிருந்தவர் இந்தப் பெருமகனார்.

இறை சேவையுடன் மகத்தான மக்கள் சேவையையும் ஆற்றி மறைந்த ஆண்டகை இராயப்பு ஜோசப் அவர்களின்புகழ் உடல் அவர் ஆழமாக நேசித்த தமிழ் ஈழ மண்ணுடன் இரண்டறக் கலந்தாலும் தமிழர்கள் அனைவரினதும்உள்ளங்களிலும் அன்னார் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார் .

இன்று மறைந்த ஆண்டகை இராயப்பு ஜோசப் அவர்களுக்கான வணக்க நிகழ்வு லண்டன் ஹரோ பகுதியில்தற்போதய பிரித்தானிய சட்டவிதிகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டது.

சுடர் எற்றலுடன் நிகழ்வு  ஆரம்பமாகி மலர்வணக்கத்தை தொடர்ந்த்து அகவணக்கம் இடம்பெற்றது. நிகழ்வில்ஜெகன் மற்றும் லக்‌ஷன் ஆகியோரின் நினைவு சுமந்த கவிதைகளை தொடர்ந்த்து  அருட்பணி ஜெயபாலன்குரூஷ் மன்னார் மறை மாவட்டம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டவாளர் காண்டீபன் , ஊடகவியளாளர்கோபி ஆகியோரின் உரைகளை தொடர்ந்த்து ஆங்கில உரையினை திருமதி ஷர்மிலா ஜெகன்மோகன்வழங்கினார்.

அவரது இறுதி மூச்சு வரை தமிழ் மக்களுக்காக உழைத்த அந்த பெருந்தகை தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டஅநீதிகளுக்கு நீதி கேட்டும் தமிழ் மண்ணில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதையும் காணாமல் ஆக்கபட்டவர்களின் நிலை என்ன என்பதையும் தமிழ் மக்களுக்கான நீதி எங்கே என்பதையும் தமிழரின் குரலாகசர்வதேசமெங்கும் ஒலித்துக்கொண்டிருக்க  அவரது கேள்விகளுக்கு விடை காண நாம் அனைவரும் தொடர்ந்துஉழைப்போம்    என்ற உறுதிமொழியோடு நிகழ்சியை நிறைவு பெற்றது.

SHARE