ஈகையர் வணக்க நிகழ்வு வடமேற்க்கு லண்டன்

0

தீயில் கருவான வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் ஈகைப்பேரொளி முருகதாசன் ஈகைப்பேரொளி செந்தில்குமரன் உட்பட 25 வீரத்தமிழ்மகன்களும் தியாகச்சுடர் வீரமங்கை செங்கொடிக்குமான ஈகையர் வணக்க நிகழ்வு வடமேற்க்கு லண்டன் பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் நினைவு கூறப்பட்டது .
நிகழ்வானது தூய்மை, தியாகம் , உறுதி , வீரம் என்பவற்றை வெளிப்படுத்தும் நான்கு வண்ணங்களைக் கொண்ட தமிழீழத் தேசியக்கொடியேற்றலோடு ஆரம்பமானது . தமிழீழ தேசிய கொடியினை வடமேற்க்கு லண்டன் மகளிர் பொறுப்பாளர் தர்ஷிகா ஸ்ரீசிவகுமார் அவர்கள் ஏற்றி வைத்தார் . ஈகைச்சுடரினை மாவீரர் விந்தனின் சகோதரன் திரு மகேந்திரன் ஏற்றி வைத்தார் .
திருஉருவத்திற்க்கான மலர் மாலையினை ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் தாயார் அணிவித்து அஞ்சலி செலுத்த அவரை
தொடர்ந்து பொது மக்கள் மலர் வணக்கம் சுடர்வணக்கம் செலுத்தினார்கள் . எழுச்சி நடனங்களை செல்வி சகி மகாலிங்கம் மற்றும் வடபோர்ட் தமிழ் கல்விக்கூடம் ஆசிரியர் சண்முகப்பிரியாவின் மாணவர்களும் வழங்கினார்கள் ஈகையர் நினைவு சுமந்த கவிதையை திரு வேல்தர்மா திரு தாஸ் மற்றும் வடபோர்ட் கல்விக்கூட மாணவர் சாய்குகணேசன் வழங்கினார்கள் . எழுச்சி கானங்களை திரு மயூரன் சதானந்தன் அவர்கள் வழங்கினார்கள் . ஈகை கொடையாளர்கள் நினைவு சுமந்த சிற்றுரையை மாவீரர் விந்தனின் சகோதரன் திரு மகேந்திரன் வழங்கினார்கள். தொடர்ந்து அரசியல் கலந்துரையாடலை திரு சதா மற்றும் திரு செல்வகுமரன் ஆகியோர் பொதுமக்களோடு சேர்ந்து நடத்தினார்கள் . இறுதியாக தமிழீழ தேசிய கொடி கையேந்தலுடன் தமிழீழம் கிடைக்கும் வரை தொடர்ந்து பயணிப்போம் என்கின்ற உறுதிமொழியோடு நினைவு வணக்கம் நிறைவு பெற்றது.

SHARE