
பிரித்தானியா வாழ் மாணவர்கள் தமிழ்ப் பாடசாலைகள் ஊடாக பங்குபெறலாம். இப் போட்டியில் பங்குபெறவிரும்பும் மாணவர்களை தமிழ்ப்பாடசாலையின் நிர்வாகி அல்லது ஆசிரியர்கள் இருவர் உறுதிப்படுத்த வேண்டும்.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கலை பண்பாட்டுக் கழக நடுவர்களால் போட்டியின் இறுதி முடிவு அறிவிக்கப்படும். ஒவ்வெரு பிரிவிலும் சிறந்த இரண்டு ஓவியங்களுக்கு நினைவுப் பரிசுகளும் சான்றிதழ்களும் மாவீரர் நினைவு நாள் அன்று London Excel மண்டப மேடையில் வைத்து வழங்கப்படும்.
ஒவ்வொரு பிரிவுக்கும் நாங்கள் தெரிவு செய்து கொடுத்துள்ள தலைப்பினைக் கருத்திற் கொண்டு மாணவர்கள் தங்களின் கற்பனைத்திறனைப் பயன்படுத்திக் குறிப்பில் இடப்பட்ட விடயங்களையும் கருத்தில் கொண்டு வரைந்து, சரியான வண்ணங்கள் தீட்டவேண்டும். பிரதிகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
நிழல்படம் அல்லது நூல்களில் இருக்கும் படங்களைப் பிரதிசெய்யக்கூடாது. ஆனால் பார்த்து வரைய முடியும். மேலதிகமாகத் தலைப்புக்குப் பொருத்தமான தாயகம் சார்ந்த விடயங்களை உள்ளடக்குவதை வரவேற்கிறோம். ஓவியத்தின் பின்புறத்தில் மாணவரின் முழுப்பெயர், பாடசாலையின் பெயர், பாடசாலை முகவரி, பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம் என்பவற்றையும் குறிப்பிடவும்
| பிரிவு | வயதெல்லை (பிறந்த ஆண்டு) | ஓவியம் |
|---|---|---|
| அ | 2018ம் ஆண்டு அல்லது இதற்குப் பின்னர் | தமிழீழத்தேசியப் பூ ( கார்த்திகைப் பூ / காந்தள் ) தரப்பட்ட படத்தினை தரவிறக்கம் செய்து உரிய வண்ணம் தீட்டவும். |
| ஆ | 2017 - 2016 6 - 7 | தமிழீழத் தேசியக்கொடி தரப்பட்டுள்ள படத்தினை தரவிறக்கம் செய்து உரிய வண்ணம் தீட்டவும் |
| இ | 2015 - 2014 8 - 9 | உலக வரைபடத்தினை தரவிறக்கம் செய்து தமிழர்களின் பூர்வீக பிரதேசங்களை சிவப்பு வண்ணத்திலும் தமிழர் புலம்பெயர்ந்து செறிந்து வாழும் நாடுகளினை மஞ்சள் வண்ணத்திலும் வண்ணம் தீட்டவும். |
| ஈ | 013 - 2012 10 - 11 | தமிழீழ தேசியச் சின்னங்களில் ஒன்றை வரைந்து வண்ணம் தீட்டவும் |
| உ | 2011 - 2010 12 - 13 | மாவீரர் துயிலும் இல்லத்தினை வரைந்து வண்ணம் தீட்டவும் |
| ஊ | 2009 - 2008 14-15 | தமிழீழத்தில் நீங்கள் பார்த்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் ஒன்றை வரைந்து வண்ணம் தீட்டவும் |
| எ | 2007 - 2006 16 - 17 | தமிழீழத்தில் அகிம்சை வழியில் போராடி உயிர் நீத்த தியாகியின் படத்தினை வரைந்து வண்ணம் தீட்டி, பெயரினையும் குறிப்பிடுக. |
| ஏ | 2005 - 2004 18 - 19 | நீங்கள் விரும்பும் மாவீரரை வரைந்து வண்ணம் தீட்டவும |
| ஐ | 2003 அல்லது இதற்கு முதல் 20 / 20 + | தமிழீழத்தின் இன்றை ய நிலையை விளக்கும் காட்சியினை வரைந்து வண்ணம் தீட்டவும். |
- 20.11.2023ற்கு முன்னர் Unit 103, First Floor, Kingfisher House, Restmor Way, Hackbridge, SM6 7AH. என்ற முகவரிக்குக் கிடைக்குமாறு அனுப்பி வைக்கும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.
- போட்டியாளர் ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவில் பங்குபற்றலாம், ஆனால் அவருடைய
வயதுப்பிரிவுக்கு மேற்பட்ட பிரிவாக இருக்கவேண்டும். - அனைத்து ஓவியங்களும் தமிழீழம், தமிழ் தேசியம், தமிழர் பண்பாடு சார்ந்ததாக இருத்தல் வேண்டும்.
- நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.








