32ஆவது ஆண்டு TRO தமிழர் மாபெரும் விளையாட்டு விழா சிறப்பாக ஆரம்பம்

62

பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் விளையாட்டு துறை ஏற்பாட்டில் 32ஆவது ஆண்டு TRO தமிழர் மாபெரும் விளையாட்டு விழா இன்று (24 மே) காலை 8 மணி முதல் சிறப்பாக ஆரம்பமானது. பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழ் மக்கள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ் இளையோர் அமைப்பின் அரசியல் துறை முன்னாள் இணைப்பாளர் திரு சதா அவர்கள் பொதுச் சுடரினை ஏற்றி வைத்து நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் ஜென்சியா நியூட்டன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
பிரிகேடியர் ஜெயம் அவர்களுடன் களமுனைகளில் பணியாற்றிய திரு நிலவன் அவர்கள் தமிழீழ தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து திரு நிலவன் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி வைத்து மாவீரர் நினைவுகளைப் போற்றினார்.

பின்னர் அக வணக்கம் செலுத்தப்பட்டதுடன், மலர் வணக்க நிகழ்வும் இடம்பெற்றது. அனைவரும் ஒழுங்காக வரிசையாக வந்து மலர் வணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

அனைத்து நினைவேந்தல் நிகழ்வுகளும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் ஆரம்பமானது. கால்பந்து, நெட்பால், வாலிபால் மற்றும் சாப்ட்பால் கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் உற்சாகமாக பங்கேற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

Previous article32 ஆம் ஆண்டு மாபெரும் தமிழர் விளையாட்டு விழா
Next articleநல்வாய்ப்பு சீட்டு 2026 – TRO தமிழர் விளையாட்டு விழா