ஐ.நா நோக்கிய மிதியுந்துப் போராட்டம் இன்று பிரித்தானியாவில் பேரெளிச்சி கண்டு
நாளை நெதர்லாந்தை அடைகின்றது.
இன்றைய மிதியுந்துப் போராட்டம் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடை பெற இருக்கும் அனைத்துலக ரீதியிலான தமிழீழ மக்களின் போராட்டத்திற்கு காத்திரமான பங்காற்றி பல ஐரோப்பிய நாடுகளைக் கடந்து பயணிக்க இருக்கின்றது.
பிரித்தானியப் போராட்டத்தில் பணியாளர்களும் தேசபிமானிகளும் மக்களுமாக இணைந்து
தமிழீழத்தின் தேசியக் கொடிகளை கையிலேந்தி போராட்டத்தில் இணைந்திருந்தனர்.
தொடர் மிதியுந்துப் பயணமானது லண்டன் மத்திய வழிகள் ஊடாகப்
பயணித்து பிரதமர் வதிவிடத்தை சென்றடைந்தது.
அங்கு உணர்வோடு கூடிய தமிழ் மக்கள் சிங்கள தேசத்தினது கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பிற்கு எதிராக கொட்டொலிகளை எழுப்பியவாறு தங்களது
அரசியல் அபிலாசைகளை பிரித்தானிய தேசத்திற்கு முரசறைந்தனர்.
இறுதியாக தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
என்ற உறுதியேற்போடு
நெதர்லாந்தை நோக்கி தொடர் போராட்டம் கையளிக்கப்படுகின்றது.











