முள்ளிவாய்க்கால் 13ம் ஆண்டு நினைவு

236

முள்ளிவாய்க்கால் 13 ம் ஆண்டு நினைவு நாளினை நினைவு கூரும் வகையில், பிரித்தனியத் தமிழ் இளையோர் அமைப்பின் ஒழுங்கமைப்பில், பாராளுமன்ற சதுக்கத்தின் முன்றலில் மதியம் 1 மணியிலிருந்து 2 மணிவரை கவனயீர்ப்புப் போராட்டமும் அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலின் 13 ம் ஆண்டு நிகழ்வின் தொடரச்சியாக தமிழர ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினரும் இணைந்து நிகழ்வை முன்னெடுத்தனர்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஒழுங்கமைப்பில் பிற்பகல் 230 மணியளவில் ஒலட் பிலேஷ் யாடல் இருந்து நீதிக்கான பேரணி ஆரம்பமாகி இல 10 டவுணிங் சாலைக்கு முன்பாக வந்தடைந்தது.

பிற்பகல் 3 மணியளவில் நிகழ்வு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது. பொதுசுடரினை மூத்தசெயற்பாட்டாளர் திரு. சிவலிங்கம் அவர்கள் ஏற்றிவைத்தார். பிரித்தானியத் தேசிய கொடியினை தமிழ் இளையோர அமைப்பைச் சேர்ந்த செல்வி பவித்திரா உதயகுமாரும் தமிழீழத் தேசிய கொடியினை 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதிவரை பயணித்த தேசியச்செயற்பாட்டாளர் திரு.தர்சன் அவர்களும் ஏற்றிவைத்தனர்.

அகவணக்கத்தினை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்து வைக்கப்பட்டுருந்த நினைப்படத்திற்கான மலர்வணக்கம், சுடர்வணக்கம் பொதுமக்களால் செலுத்தப்பட்டது. தமிழர் இளையோர் அமைப்பு சார்பில் பவித்திரா உதயகுமார் உரை ஆற்றினார்.

முள்ளிவாய்க்கால் நெருப்பு நினைவுகள் என்னும் தலைப்பில் நடனம் மற்றும் கவி அரங்கம் இடம்பெற்றது. தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் உரைகளும் இடம்பெற்றது. இறுதியாக தேசியக்கொடிகள் கையேந்தப்பட்டு தமிழீழம் எனும் இலக்கை அடையும்வரை தொடர்ந்து பயணிப்போம் என்ற உறுதியோடு நிகழ்வு நிறைவு பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கப்பட்டது.

Previous articleலெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும் மற்றும் 2ம் லெப்.மாலதியினதும் நினைவு வணக்க நிகழ்வு
Next articleகறுப்பு ஜூலை – 39ம் ஆண்டு 23.07.2022