கறுப்பு ஜூலை (ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1963 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத்திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்ககளைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 3000 பேர் வரை படுகொலை செய்த ஒரு துன்பவியல் நிகழ்வாகும்.
இன்றோடு 39 ஆண்டுகன் கடந்தோடிவிட்டது. இன்று லண்டனில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் 10 டொணிங் வீதி முன்பாக பல வீதிகள் மாறுபட்டபோராட்டங்கள் காரணமாக முடக்கப்பட்ட நிலையிலும் நூற்றுக்கணக்கான மக்களுடன் கண்டன்போராட்டத்தினை தொடர்ந்து நிகழ்வுகளும் இடம்பெற்றது.
நிகழ்வானது பிரித்தானிய தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பமானது, பிரித்தானிய தேசிய கொடியினை தமிழர்ஒருங்கிணைப்பு குழு தேசிய செயற்ப்பாட்டாளர் ஏற்றிவைத்தார். தொடர்ந்தது தமிழீழ தேசியகொடியினைதமிழர் ஒருங்கிணைப்பு குழு வடமேற்கு பிராந்திய பொறுப்பாளர் திரு அசோகன் ஏற்றிவைத்தார். ஈகைச்சுடரினை தேசிய செயற்ப்பாட்டாளர் ஆறுமுகம் ஐயா அவர்கள் ஏற்றிவைத்ததை தொடர்ந்தது தமிழீழதாயகத்தின் வானொலியான புலிகளின் குரலில் பணியாற்றிய திரு சுரேஷ் கோபி அவர்கள் மலர்வணக்கத்தினை செலுத்தினார்கள். நிகழ்வில் கவிதைகள். நடனங்கள் மற்றும் உரைகள் இடம்பெற்றன். தமிழீழம் கிடைக்கும் வரை பயணிப்போம் என்ற உறுதி மொழியோடு நிகழ்வானது முடிவடைந்தது.










