தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் 11வது நினைவேந்தல் நிகழ்வு

315

1938 இல் தமிழீழத்தில் மலர்ந்து , எமது தேசத்தின் தேவையையும் , வலியையும் .. உலகெல்லாம் உணரச் செய்து தனது 68 வது அகவையில் வீரமரணமடைந்த வீரமகன் “தேசத்தின் குரல் ” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11 வது நினைவேந்தல் நிகழ்வானது பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்வின் முதல் நிகழ்வாக பொதுச் சுடரினை பிரித்தானிய இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் செல்வி சஞ்சு வசிகனேசன் ஏற்றிவைத்தார்

ஈகை சுடரினை மாவீரர் வேந்தன் அவர்களின் சகோதரன் செல்லத்தம்பி மகேந்திரன் ஏற்றி வைத்தார் தொடர்ந்து மலர்வணக்கம் மற்றும் சுடர்வணக்கம் இடம்பெற்றது . தேசத்தின் குரல் பாலா அண்ணாவைப் பற்றி கவிதையை திருமதி உமா காந்தி மற்றும் திருமதி ரேணுகா உதயகுமார் வழங்கினார்கள் . எழுச்சி கானங்களை மயூரன் சதானந்தன் வழங்கினார் , சிறப்புரை ஆங்கில உரையினை தொடர்ந்து திருமதி ஆசிரியை விஜயராணி கிருஷ்ணராஜா மற்றும் நாட்டியாலய நடனப்பள்ளி ஆசிரியை திருமதி ஷர்மினி கண்ணன் ஆகியோரின் மாணவிகள் எழுச்சி நடனங்களை வழங்கினார்கள்.
நிறைவாக தமிழீழம் கிடைக்கும் வரை தொடர்ந்தும் பயணிப்போம் என்கின்ற உறுதிமொழியோடு நிகழ்வு நிறைவு பெற்றது.

Next articleபிரித்தானிய பாராளுமன்றத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு ஒன்று கூடல்!