இலண்டனில் தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் – அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் நிறைவு

10

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு – ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், இலண்டனில் உள்ள பிரித்தானியப் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக, 10 Downing Street பகுதியில் இன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தியாக தீபம் திலீபனின் நினைவுகளைச் சுமந்து நடைபெற்ற இந்நிகழ்வில் பலர் கலந்துகொண்டு தமது வணக்கத்தைச் செலுத்தினர்.

நிகழ்வின் நிறைவாக, அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் பழச்சாறு வழங்கப்பட்டு, உணவு தவிர்ப்பு நிறைவு செய்து வைக்கப்பட்டது.

Previous articleஇலண்டனில் தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் – அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம்
Next articleதியாக தீபம் லெப்டினன்ட் கேணல் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல், கேணல் சங்கர் அவர்களின் 25ஆம் ஆண்டு மற்றும் கேணல் ராயு அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு.