தியாக தீபம் லெப்டினன்ட் கேணல் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல், கேணல் சங்கர் அவர்களின் 25ஆம் ஆண்டு மற்றும் கேணல் ராயு அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு.

5

தியாக தீபம் லெப்டினன்ட் கேணல் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல், கேணல் சங்கர் அவர்களின் 25ஆம் ஆண்டு மற்றும் கேணல் ராயு அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று 27.09.2026 ஞாயிற்றுக்கிழமை இல்போர்டில் நடைபெற்றது.

இன்றைய நிகழ்வில் முதலில் பொதுச்சுடரினை திருமதி சரஸ்வதி முருகேசு அவர்கள் ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து தமிழீழ தேசியக் கொடியினை, பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் வடகிழக்குப் பிராந்தியப் பொறுப்பாளர் செல்வி யாதவி தயாழபவன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஈகைச்சுடரினை, பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் துணைப் பொறுப்பாளரும் சிறுத்தைப் படை அணித் தளபதியுமான ஆரபி மணியரசன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து திருவுருவப் படத்திற்கான மலர் மாலையினை, பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மகளிர் அணியைச் சேர்ந்த கரஷ்மிகா லோகேஷ்வரன் அவர்கள் அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வின் கலை மற்றும் உரை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. லெப்டினன்ட் கேணல் திலீபன் குறித்து ஆங்கிலத்தில் கரஷ்மிகா லோகேஷ்வரன் உரையாற்றினார். கேணல் ராஜு / குயிலன் குறித்து கலை அழகி அவர்கள் உரையாற்றினார். தொடர்ந்து கேணல் சங்கர் குறித்த உரையும் இடம்பெற்றது.

ஈஸ்ட்ஹாம் தமிழ்க் கல்விக்கூடத்தின் சார்பில் திருமதி டயானி ரகுபதி அவர்களின் நெறியாள்கையில் செல்விகள் ஷிவானா ரவிசங்கர், சனுஜா கலைச்செல்வம், தனன்யா கலைச்செல்வம், வைஷாணா நவநீதரன் ஆகியோரின் நடன நிகழ்வு இடம்பெற்றது.

ஈஸ்ட்ஹாம் தமிழ்க் கல்விக்கூட மாணவன் செல்வன் துஷாந்த் ரவிசங்கர் கவிதை வழங்கினார். தொடர்ந்து செல்வி சோபியா நகுலேஸ்வரனின் நெறியாள்கையில் ஷிவானா ரவிசங்கர், அவீனா நகுலேஸ்வரன், அகன்யா நகுலேஸ்வரன் ஆகியோரின் நடன நிகழ்வும் இடம்பெற்றது.

மேலும், ஈஸ்ட்ஹாம் தமிழ்க் கல்விக்கூட மாணவன் செல்வன் ஆதவன் தயாளபவன் கவிதை வழங்கியதுடன், மாணவி செல்வி ஷிவானா ரவிசங்கர் உரையாற்றினார். திருமதி அன்னலட்சுமி ஜெயபாபு அவர்களின் கவிதையும் நிகழ்வில் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து “நம்புங்கள் தமிழீழம்” பாடல் ஒலிக்கப்பட்டு பின்னர் தமிழீழ தேசியக் கொடி கையேந்தலுடன் , தமிழீழ கிடைக்கும் வரை பயணிப்போம் என்கின்ற உறுதிமொழியுடன் நினைவு வணக்க நிகழ்வு நிறைவடைந்தது.

Previous articleஇலண்டனில் தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் – அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் நிறைவு