இலண்டனில் தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் – அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம்

23

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு – பிரித்தானியா ஆகியவற்றின் ஏற்பாட்டில், தியாக தீபம் லெப்டினன்ட் கேணல் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, இன்று (செப்டம்பர் 26, சனிக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை இலண்டனில் உள்ள பிரித்தானியப் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக, 10 Downing Street பகுதியில் அடையாள உணவு தவிர்ப்பு விழிப்புணர்வுப் போராட்டம் நடைபெறுகிறது.
இன்றைய நிகழ்வின் ஆரம்பமாக, பிரித்தானியக் கொடியினைத் தமிழ் இளையோர் அமைப்பின் துணைப் பொறுப்பாளர் கலையரசி மணியரசன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, தமிழீழத் தேசியக் கொடியினைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியல் துறை துணைப் பொறுப்பாளர் செல்வா அவர்கள் ஏற்றி வைத்தார்.
இதனையடுத்து, ஈகைச்சுடரினை லெப்டினன்ட் கேணல் கோபி அவர்களின் புதல்வி டிலானி அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.
பின்னர், திருவுருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மகளிர் அணி சார்பில் ஷர்மி அவர்களும், வட பிராந்திய மாவீரர் பணிமனைப் பொறுப்பாளரும் லெப்டினன்ட் கேணல் மனோஜ் அவர்களின் சகோதரருமான கமல் அவர்களும் மலர் மாலைகளை அணிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மலர் வணக்கமும் தீப வணக்கமும் இடம்பெற்றன.

Previous articleஎழுச்சி மற்றும் வணக்க நிகழ்வு
Next articleஇலண்டனில் தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் – அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் நிறைவு