18 வீரவேங்கைகளுக்கான வீரவணக்க நிகழ்வு

179

 

2009 மே 18 ஆம் நாள் வரையிலான தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்தும் இதுவரை மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாத 18 தமிழீழ மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு இன்று பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மாவீரர் பணிமனை ஏற்பாட்டில், அனைத்துலக வழிகாட்டலின் கீழ், லண்டன் சற்றன் பகுதியில் இந்நிகழ்வு நடைபெற்றது.

பொதுச் சுடரை திரு. உமா காந்தி பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கலைபண்பாட்டு கழக செயற்பாட்டாளர் ஏற்றிவைத்தார். தமிழீழ தேசியக் கொடியை தாயகத்தைச் சேர்ந்த மன்னார் மாவட்ட பொறுப்பாளர் திரு. சுரேஷ் அவர்கள் ஏற்றிவைத்தார் தொடர்ந்து தமிழீழ தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு வீரச்சாவடைந்த 18 வீரவேங்கைகளின் திரு உருவப்படங்களுக்கு ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன.
மக்களால் மலர்வணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து, 18 வீரவேங்கைகளுகான நினைவுரைகள் மற்றும் திரு. சுரேஷ் அவர்களின் உரையில் தமிழீழ விடுதலைக்கான அவசரத்தையும், இம்மாவீரர்களின் தியாகப் பாதையை எதிர்காலத் தலைமுறைகள் நினைவில் கொள்ள வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இன்றைய நிகழ்வில் வீரவணக்கத்திற்காக உறுதிப்படுத்தப்பட்ட 18 மாவீரர்கள்:
1. வீரவேங்கை ஆனந்தி
2. வீரவேங்கை கோபி
3. வீரவேங்கை முத்தப்பன்
4. வீரவேங்கை ஆண்டாள்
5. வீரவேங்கை அகழிசை
6. வீரவேங்கை பிரதீப்
7. வீரவேங்கை சீத்தா
8. வீரவேங்கை மதுவிழி
9. வீரவேங்கை நிதர்சனா / கோமதி
10. வீரவேங்கை அருளினி / அறிவுமதி
11. வீரவேங்கை இளையவள்
12. வீரவேங்கை புனிதா
13. வீரவேங்கை அம்பிகைபாலன்
14. வீரவேங்கை சுபெசினி / வலம்புரி
15. வீரவேங்கை காதாம்பரி
16. வீரவேங்கை காந்தன்
17. வீரவேங்கை சந்திரன்
18. வீரவேங்கை இரும்பெறை
வீரவேங்கைகளின் குடும்பத்தாரிடம் தமிழீழ தேசியக் கொடி கையளிக்கப்பட்டு , தமிழீழ தேசியக் கொடி கையேந்தப்பட்டது.

வீரவேங்கைகளின் நினைவை நனவாக்குவோம் என்கின்ற உறுதியோடு நிகழ்வானது நிறைவு பெற்றது.

Previous articleTRO தமிழர் விளையாட்டு விழா 2025
Next articleகறுப்பு யூலை 42 ம் ஆண்டு