’இற்றைக்கு 37 ஆண்டுகளுக்கு முன் ஒக்டோபர் மாதம் 3ம் நாள் 1987ம் ஆண்டு கடலில் வைத்து கடற்புறாவில் பயணித்த 17 வேங்கைகள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, பலாலியில் வைத்து பின்னர் கொழும்பு கொண்டு செல்ல புறப்பட்ட வேளையில் தம் கொள்கையின் வழி நின்று ஒக்டோபர் மாதம் 5ம் நாள் சயனைட் அருந்திய வேளையில் வீரகாவியமான 12 வேங்கைகளான திருமலைமாவட்ட தளபதி லெப்.கேணல் புலேந்திரன், யாழ் மாவட்ட தளபதி லெப்.கேணல் குமரப்பா,மேஜர்அப்துல்லா,கப்டன்பழனி,கப்டன்கரன்,கப்டன்மிரேஸ்,கப்டன்நளன்,லெப்டினன்ட்அன்பழகன்,லெப்டினன்ட்தவக்குமார், 2ம்லெப்டினன்ட் ரெஜினோல்ட்,2ம்லெப்டினன்ட் ஆனந்தகுமார்,கப்டன் ரகுவப்பா ஆகியோருடைய நிகழ்வானது பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினாரால் நினைவு கூரப்பட்டது.
நிகழ்வில் பொதுச் சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர் திரு ஞானகுலசேகரன் ராமேஷ்வரன் அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழீழத் தேசியக் கொடியினை ஒருங்கிணைப்புக் குழுவின் மகளிர் நிர்வாக பொறுப்பாளர் திருமதி ஆரபி மணியரசன் அவர்கள் ஏற்றி வைத்தார், தொடர்ந்து ஈகைச் சுடரினை
ஒருங்கிணைப்புக் குழுவின் மகளிர் நிர்வாக பொறுப்பாளர் ஜக்கியராஜ்ஜியம் தர்சினி தேவராஜா அவர்கள் அணிவித்தார்கள்.
அகவணக்கத்தினை தொடர்ந்து, திருவுருவப் படங்களுக்கான மலர் மாலையினை திருமதி சுபாசினி மற்றும் திருமதி சுகந்தினி அவர்கள் அணிவித்திருந்தார்கள்.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் எழுச்சி உரை,கவிதை, நடனம், நினைவுரை, உறுதியுரை போன்ற எழுச்சி நிகழ்வுகளும் அரங்கேறியிருந்தன.
தேசியக்கொடி கையேந்தலுடன் , மாவீரர்களின் கனவு நினைவாக பயணிப்போம் என்கின்ற உறுதியோடு நிகழ்வானது நிறைவு பெற்றது.











