தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

120

நமது தேசியத் தலைவர் மற்றும் தளபதிகள் மட்டுமன்றி, தமிழீழ மக்கள் அனைவராலும் அன்புடன் “பாலா அண்ணா” என அழைக்கப்பட்டவரும், சர்வதேச அரசியல் அரங்கில் சிறந்த ராஜதந்திரியாகவும், அரசியல் சாணக்கியராகவும், எமது தேசியத் தலைவரின் அரசியல் ஆலோசகராகவும் விளங்கிய தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு, பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் லண்டன் சட்டன் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், அனைத்துலக மகளிர் பொறுப்பாளர் ஆரபி அவர்கள் ஈகைச்சுடரை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து, தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டு, நினைவு வணக்க நிகழ்வுகள் உணர்வுபூர்வமாகவும் இடம்பெற்றன.


Previous articleதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19ம் ஆண்டு வணக்க நிகழ்வு
Next articleபொங்கல் விழா 2026