முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி அவர்களின் 37ம் ஆண்டு வீரவணக்க நாளும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்.

242

10.10.1987 அன்று யாழ். மாவட்டம் கோப்பாய் பகுதியில் இந்திய இராணுவத்தினருடனான நேரடி மோதலில் விழுப்புண்ணடைந்த நிலையில் ‘சயனைட்’ உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி உட்பட அதே சம்பவத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2ம் லெப். கஸ்தூரி, வீரவேங்கை தயா, வீரவேங்கை ரஞ்சினி,வீரவேங்கை அன்ரன் ஆகிய மாவீரர்களின் 37ம் ஆண்டு வீரவணக்க நாளையும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளையும் நினைவு கூர்ந்த வணக்க நிகழ்ச்சியானது நேற்றைய தினம்
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒழுங்கமைப்பில் ஹரோ பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

ஆரம்ப நிகழ்ச்சியாக பிரித்தனிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கலை பண்பாட்டுக் கழக பொறுப்பாளர் திரு கண்ணன் அவர்கள் பொதுச் சுடரினை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்கள்.
தமிழீழத் தேசியக் கொடியினை தமிழர் ஒருங்கிணைப்பு குழு வடமேற்கு பிராந்திய மாவீரர் பணிமனை பொறுப்பாளர் மற்றும் லெப் கேணல் மனோஜ் அவர்களின் சகோதரன் திரு கமல் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
ஈகைசுடரினை தமிழர் ஒருங்கிணைப்பு குழு வடமேற்கு பிராந்திய மாவீரர் பணிமனை துணை பொறுப்பாளர் திருமதி மாதுமை லோகேஷ்வரன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
அகவணக்கத்தினைத் தொடர்ந்து திரு உருவப் படத்திற்கான மலர்மாலையினை
லெப் கேணல் நளாயினியின் சகோதரி ஆனந்தி யெயகாந்தன் மற்றும் நடன ஆசிரியை திருமதி ராஜினி ராஜகோபால் அவர்களும் இணைந்து அணிவித்தார்கள்.
தொடர்ந்து நினைவு உரை, கவிதை நடனம் உள்ளடங்கலாக கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.
இறுதியாக நம்புங்கள் தமிழீழம் என்ற பாடல் எழுச்சியோடு பாடி நிற்க, தேசியக் கொடி கையேந்தலுடன், மாவீரர் கனவு நனவாக நாம் அனைவரும் பயணிப்போம் என்ற உறுதியேற்போடு நிகழ்வானது நிறைவடைந்தது.

Previous articleமுதல் பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி அவர்களின் நினைவு நாளும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்
Next articleமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு 2024