நம் தேசம் காக்க வீறுகொண்டு எழுந்த வீரப் புதல்வர்களை உலகிற்கு அளித்த தாய், தந்தை மற்றும் உறவுகளை மதிப்பளிக்கும் நிகழ்வானது ஹரோ மற்றும் மிச்சம் பகுதியில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்பட்டது.
எங்கள் விடுதலைக்காக தங்கள் உயிரை அர்ப்பணித்தார்கள் மாவீரர்களின் வீரத்தை மட்டுமல்ல, அவர்களை உருவாக்கிய பெற்றோர்களின் உழைப்பையும் நாங்கள் என்றும் நினைவில் கொள்வோம்.
இன்று விதையாகிய சந்தணபேழைகளின் வீரத்தின் ஊடாக, நாம் சுவாசிக்கும் காற்றில் அவர்களது மூச்சுகாற்றும் கலந்து இருக்கின்றது.
அந்த தியாகமானது எப்போது மறக்க கூடியது ஒன்றல்ல.
லெப் கேணல் கதிரவன் அவர்களின் தாயார் கமலாதேவி கந்தசாமி அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றி வைத்தார்கள்.
தமிழீழ தேசிய கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நீண்ட நாள் செயற்பாட்டாளர் கருணாநிதி கனகரட்ணம் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
ஈகை சுடரினை லெப்டினன் மதியதாஸ் ,2ம் லெப்டினன் மரியதாஸ் அவர்களின் சகோதரிகள் அவர்கள் ஏற்றி வைப்பார்.
தொடர்ந்து நினைவு கல்லறைக்கான மலர்மாலை அணிவித்தல். மாவீர்ர் நினைவு கல்லறைக்கான மலர்மாலையினை அணிவித்தார்கள்.
வடமேற்க்கு பகுதியில் பொதுச்சுடரினை லெப்டினன் புரட்சிக்காவலன் அவர்களின் சகோதரிதிருமதி . சுபிதா சிவாகரும்
அவர்கள் ஏற்றிவைத்தார்கள்
தமிழீழ தேசியக்கொடியினை தமிழர்ஒருங்கிணைப்பு குழு வடமேற்கு இலண்டன் பிராந்திய மாவீரர் பணிமனை பொறுப்பாளரும் லெப் கேணல் மனோஜ் அவர்களின் சகோதரருமான திரு. கமல் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்
ஈகைச்சுடரினை தமிழர்ஒருங்கிணைப்பு குழு பிரித்தானிய துணைப்பொறுப்பு மற்றும் அனைத்துலக மகளிர் அணி பொறுப்பாளருமாகிய திருமதி. ஆரபி அவர்கள்
அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
அகவணக்கத்தினை தொடர்ந்து மாவீரர் நினைவு கல்லறைக்கு மலர்மாலையினை
– ஈகைப்பேரோளி முருகதாசனின் தாயார் திருமதி. வர்ணகுலசிங்கம் அவர்களும்
– மேஜர் சேந்தனின் தாயார் திருமதி.றோஸ்மேரி இதயமலர் அவர்களும் அணிவித்தார்கள்
மாவீரர் பெற்றோர் குடும்பங்களுக்கான மதிப்பளிக்கப்பட்டு உணவுகள் பரிமாற்ப்பட்டு தொடர்ந்து பயணிப்போம் என்கின்ற உறுதியோடு நிகழ்வானது நிறைவடந்தது












