2ஆம் லெப். மாலதி நினைவு நாளினையும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளினையும் முன்னிட்டு மாவீரர் மகளிர் விளையாட்டு விழா நிகழ்வுகள் ஆரம்பம் – 2026

9

2ஆம் லெப். மாலதி அவர்களின் நினைவு நாளினையும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளினையும் முன்னிட்டு, பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மகளிர் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட “மாபெரும் மகளிர் விளையாட்டு விழா – 2026” இன்று 04.10.2026 ஞாயிற்றுக்கிழமை, பிரித்தானியாவின் Harris Academy Morden, Lilleshall Road, Morden, Surrey மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் ஆனந்தன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து பிரித்தானிய தேசியக் கொடியினை, பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மகளிர் அணியின் விளையாட்டுத்துறை இணைப்பாளர் மாதுமை அவர்கள் ஏற்றிவைத்தார்.

தமிழீழ தேசியக் கொடியினை, பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மகளிர் பொறுப்பாளர் தேவதர்ஷினி அவர்கள் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து, நிகழ்வில் ஈகைச்சுடரினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வெளிமாவட்டப் பொறுப்பாளர் நவம் அவர்கள் ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து, 2ஆம் லெப். மாலதி அவர்களின் திருவுருவப் படத்திற்கான மலர்மாலையினை ஆசிரியர்களான சிவா மற்றும் ரேணுகா ஆகியோர் அணிவித்து மலர் வணக்கம் செலுத்தினர்.

காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும் இவ்விளையாட்டு விழாவில் வலைப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம், கிளித்தட்டு, தற்காப்புக்கலை மற்றும் சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இடம்பெற்று வருகின்றன.

2ஆம் லெப். மாலதி அவர்களின் நினைவைப் போற்றும் வகையிலும், தமிழீழப் பெண்களின் எழுச்சி, ஆளுமை மற்றும் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தும் வகையிலும் இவ்விளையாட்டு விழா முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


Previous articleதிலீபன் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிராக லண்டனில் இன்று போராட்டம்!